என் மீதான குற்றச்சாட்டுகள் எதுவும் நிரூப்பிக்கப்படவில்லை என
சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கார்த்தி
சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
கருப்புப் பண மோசடி வழக்கு,
ஐ.என்.எக்ஸ் மீடியா மோசடி வழக்கு, ஏர்செல் மேக்சிஸ் வழக்கு என பல்வேறு
வழக்குகளில், முன்னாள் மத்தியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி
சிதம்பரம் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து
விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த
நிலையில், எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில், சிவகங்கை
தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியின் வேட்பாளராக
கார்த்தி சிதம்பரம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அவர், சென்னையில் செய்தியாளர்களிடம்
கூறும்போது, "என் மீதான குற்றச்சாட்டுகள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை.
காங்கிரஸ் பெரிய கட்சி என்பதால், வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடுவதில்
தாமதம் ஏற்பட்டது. திமுகவின் ஆதரவுடன் சிவகங்கை தொகுதியில் வெற்றி
பெறுவேன்" என கார்த்தி சிதம்பரம் கூறினார்.
newstm.in

No comments:
Post a Comment