அரியலூர்:
அரியலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-
பாராளுமன்ற
தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் தி.மு.க.
கூட்டணி வெற்றி பெறும். மத்திய, மாநிலத்தில் ஆளும் கட்சிகள் கூட்டணி
அமைத்து தேர்தலை சந்திப்பதால் முறைகேடு நடக்க வாய்ப்பு உள்ளது. இதனை
கருத்தில் கொண்டு தேர்தல் ஆணையம் மிகுந்த எச்சரிக்கையோடு விழிப்புணர்வோடு
தேர்தலை நடத்த வேண்டும்.
மோடி
ஆட்சியில் விவசாயிகள் மட்டுமல்ல, அனைத்து தரப்பு மக்களும்
பாதிக்கப்பட்டுள்ளனர்.40 தொகுதியிலும் நேரமிருந்தால் பிரசாரத்தை
மேற்கொள்வேன். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment