
ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டு காங்கிரஸ் இடையே கூட்டணி அமைந்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை
உறுதி செய்துள்ளோம் என காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார்.
தேசியத்தின் நலனை கருத்தில் கொண்டு இந்த கூட்டணி அமைந்துள்ளது.
பாகிஸ்தானில் இருந்து பெரும் எச்சரிக்கையை எதிர்க்கொண்டுள்ள மாநிலத்தில்
மதசார்பற்ற அமைப்புகளை வலுப்படுத்த கூட்டணி அமைக்கப்படுகிறது. காங்கிரஸ்
ஜம்மு மற்றும் உதாம்பூர்
தொகுதிகளில் போட்டியிடுகிறது.
ஸ்ரீநகர் தொகுதி தேசிய மாநாட்டு காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என
கூறியுள்ளார். ஆனந்த்நாக் மற்றும் பாரமுல்லா தொகுதியில் நட்பு ரீதியிலான
போட்டியிருக்கும். அதாவது இரு கட்சிகளும் ஒருவரை ஒருவர் சாடாமல் போட்டியில்
இருக்கும். யார் வெற்றிப்பெற்றாலும், எங்களுக்கான வெற்றிதான் என்பது
அதனுடைய பொருளாகும். லாடக் தொகுதி தொடர்பாக நாங்கள் ஆலோசனையை மேற்கொண்டு
வருகிறோம்.

No comments:
Post a Comment