உத்தரகண்ட் மாநில பாஜக முன்னாள் முதல்வர் புவன் சந்திர கந்தூரியின் மகன் மணீஷ் கந்தூரி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.
மாநிலத் தலைநகர் டேராடூனில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கட்சியின் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் அவர் காங்கிரஸில் இணைந்தார்.
முன்னாள்
ராணுவ ஜெனரலான புவன் சந்திர கந்தூரி, பாஜக ஆட்சியில் உத்தரகண்ட் மாநில
முதல்வராக பதவி வகித்துள்ள நிலையில், அவரது மகன் மணீஷ் கந்தூரி தற்போது
காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும்,
அவரது தந்தை எம்.பி.யாக பதவி வகிக்கும் பௌரி மக்களவைத் தொகுதியில், மணீஷ்
கந்தூரி இந்த முறை காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவார் எனத் தெரிகிறது.
newstm.in

No comments:
Post a Comment