சென்னை: லோக்சபா தேர்தலையொட்டி 94 பக்கங்கள் கொண்ட தேர்தல் அறிக்கையை பாமக இன்று வெளியிட்டுள்ளது.
சென்னையில்
கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அப்போது,
அன்புமணி ராமதாஸ், ஜிகே மணி, வழக்கறிஞர் பாலு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதன்பிறகு நிருபர்களிடம் ராமதாஸ் பேசுகையில், வழக்கமான ஒரு சடங்குக்காக வெளியிடப்படும் தேர்தல் அறிக்கை இது கிடையாது.
[ ஒட்டு மொத்த நாடும் ஒற்றை விரலுடன்.. லோக்சபா தேர்தல் 2019 ]
தமிழகம் இழந்த உரிமைகளை மீட்பதற்கு, அதிகாரப் பகிர்வுக்கான ஒரு அரைகூவல் இது.
36 தலைப்புகளில் தமிழக மக்களுக்கு வாக்குறுதிகளை
சொல்லியுள்ளோம். அதில், முக்கியமாக, மாநிலங்களுக்கு அதிகாரம், பாமக கூட்டணி
ஏன் வெல்ல வேண்டும், மாநில சுயாட்சி, நல்ல ஆளுகை, சமூகநீதி, வேளாண்மை,
நீர்ப்பாசனம், கல்வி, உயர்கல்வி, நலவாழ்வு, புகையிலை, மது ஒழிப்பு, சமூக
பாதுகாப்பு, வருமான வரி, மறைமுக வரி சீர்திருத்தம், வேலைவாய்ப்பு, அரசு
ஊழியர்கள் நலன், கட்டமைப்பு மேம்பாட்டு, தமிழ்மொழி, ஈழத் தமிழருக்கு நீதி, 7
தமிழர் விடுதலை, தேர்தல் சீர்திருத்தங்கள், மனித உரிமைகள், ஒருமைப்பாடு,
சிறுபான்மையினர் நலன், பிற பிற்படுத்தப்பட்டோர் நலன், பழங்குடியினர் நலன்
உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இதில் வலியுறுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு ராமதாஸ்
தெரிவித்தார்.
source: oneindia.com

No comments:
Post a Comment