
அதிமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் விவரம் எப்போது
வேண்டுமானாலும் வெளியாகும் என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சித் தலைமை அலுவலகத்தில் கூட்டணி
கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கூட்டணி
கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதி என்ற
விவரம் இன்று அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியான நிலையில், பின்னர்
அறிவிக்கப்படும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயகுமார்,
மக்களவை தேர்தலுடன் இடைத்தேர்தலிலும் வெற்றி பெறுவோம் என்றும் நாடும் நமதே,
நாளையும் நமதே எனவும் கூறினார்.
Also Read | தமிழகம் முழுவதும் ரூ.3.07 கோடி பறிமுதல்... தேர்தல் பறக்கும்
படையினர் அதிரடி
தொகுதி ஒதுக்குவதில் எந்த இழுபறியும் இல்லை என்றும் அனைத்து தொகுதிகளிலும்
வெற்றி பெறுவோம் எனவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மேலும்,
தஷ்வந்த் வழக்கை போன்றே பொள்ளாச்சி வழக்கிலும் அதிகபட்ச தண்டனை வழங்க அரசு
நடவடிக்கை எடுக்கும் என்றும் உறுதி அளித்தார்.

No comments:
Post a Comment