
தெலுங்கானா,
மங்கலஹாட் பகுதியைச் சேர்ந்த 32 வயதான மகேஸ்வரி சவுத்ரி ஹிரனியா நோயால்
பாதிக்கப்பட்டுள்ளார். தனக்கு ஏற்பட்ட நோய்க்கு சிகிச்சை பெற ஹைதராபாத்தில்
உள்ள புகழ் வாய்ந்த நிஜாமாபாத் இன்ஸ்டியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ்
(நிம்ஸ்) மருத்துவமனைக்கு மகேஸ்வரி சென்றார். அவரை பரிசோதனை செய்த
மருத்துவர்கள் கடந்த டிசம்பர் மாதம் 2-ம் தேதி அவருக்கு அறுவை சிகிச்சை
செய்து உடல்நிலை தேறிய பின் வீடு திரும்பிய அவருக்கு கடுமையான வயிற்று வலி
இருந்தது. இதற்காக எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது வயிற்றுக்குள் முக்கால் அடி
நீளம் கொண்ட கத்தரிக்கோல் இருப்பது தெரியவந்தது. இந்த சம்பவம் மருத்துவ
வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய உள்ளது.
No comments:
Post a Comment