
ஆந்திர மாநிலம்
குண்டூரில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாநாட்டில் பங்கேற்க
பிரதமர் மோடி நாளை மதியம் 3 மணி அளவில் ஆந்திராவிற்கு வருகை தருகிறார்.
இதற்கு மாநிலம் தழுவிய எதிர்ப்பு நிலவி வருகிறது. ஆந்திராவின்
ஆளும்கட்சியான தெலுங்கு தேசத்தின் தலைவரும், மாநில முதல்வருமான சந்திரபாபு
நாயுடு மோடியின் வருகைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
ஆந்திராவுக்கு பிப்ரவரி 10-ம் தேதி ஒரு கறுப்பு நாள் என்று அவர்
கூறியுள்ளார். இந்நிலையில், மோடி வந்திறங்க உள்ள விஜயவாடா விமான
நிலையத்தின் அருகில் மோடி எதிர்ப்பு பேனர்கள் அதிகளவில் வைக்கப்பட்டு
உள்ளன.
No comments:
Post a Comment