 
                
அகஸ்தீஸ்வரம்: திமுக ஆட்சிக்காலத்தில்தான் மக்களை ஏமாற்றும் பட்ஜெட்
 போடப்பட்டது. தற்போது தமிழக அரசு போட்டிருப்பது ஆக்கப்பூர்வமான பட்ஜெட் 
என்று மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
வருகிற 
19ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அகஸ்தீஸ்வரம் வருகிறார். அவர் கலந்து 
கொள்ளும் நிகழ்ச்சிக்கான புனரமைப்பு பணிகளை குமரி மாவட்டம் 
அகஸ்தீஸ்வரத்தில் பார்வையிட்ட பின் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்
 செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது
 அவர் கூறுகையில், மதுரை பொதுக்கூட்டம் என்பது தமிழக மக்களுக்கு மிகுந்த 
எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. பிரதமர் திருப்பூர் வருகை என்பது 
தமிழகமக்களுக்கு புதிய நம்பிக்கையும் தெம்பையும் உருவாக்கும்.             
   
                
தமிழக பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு அதிக திட்டங்கள்
 அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு 
கட்டும் திட்டம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இது ஒரு புதிய நம்பிக்கை 
அளிக்கும். 
திமுக வின் பட்ஜெட் என்பது டிவிப் பொட்டி, தீப்பெட்டி 
வழங்கி தமிழக மக்களை ஏமாற்றும் பட்ஜெட்டாக இருந்தது. தற்போதைய தமிழக 
பட்ஜெட் என்பது ஆக்கப்பூர்வமான விஷயங்களுக்காக திட்டமிடப்பட்ட பட்ஜெட்டாக 
உள்ளது. இது வரவேற்க வேண்டியது.
வங்கிகள் வட்டி குறைப்பது என்பது 
பொதுமக்களுக்கு பல்வேறு வகையில் பயன்பெரும். கூட்டணி பேச்சுவார்த்தைக்கான 
அறிவிப்புகளை நோக்கிய பயணம் ஆரம்பித்துவிட்டது. பாஜக கூட்டணியில் அங்கம் 
வகிக்கும் கட்சிகள் சமமாக மதிக்கப்படுவார்கள். 
தம்பித்துரை அவரது 
கொள்கையின் அடிப்படையில் பேசுகிறார். பாஜக அங்கம் வகிக்கும் கட்சிகள் 40 
தொகுதிகளிலும் வெற்றிபெறும். ஒத்த கருத்து ஒத்த செயல்பாடு உடைய கட்சி என 
கூறுவது போன்ற உலக பொய் வேறு எதுவும் கிடையாது.
1962 முதல் திமுக 
கூட்டணி அரசியலை செய்து வருகிறது. திமுகவால் தேர்தலை கூட்டணி இல்லாமல் 
இன்றும் அணுக முடியாது என பொன் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் 
தெரிவித்தார். 
 

 
No comments:
Post a Comment