சென்னையில் இன்று காலை மர்மபொருள் தீப்பிடித்து எரிந்தபடி வானில் மின்னல் வேகத்தில் சென்றதை கண்ட பொதுமக்கள் பீதியடிந்தனர்.
சென்னைஜோலார்பேட்டை
அருகேகோடியூர் பஜனை கோயில் தெருவை சேர்ந்த மக்கள் இன்று காலை 6.30
மணியளவில் வானில் ஏதோ மர்ம பொருள் தீ பிடித்து வி வடிவில் மின்னல்
வேகத்தில் சென்றதைபார்த்து அதிர்ச்சியடைந்தனர். சிலர் தனது செல்போனில் படம்
பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதால் இந்த மர்ம பொருள் குறித்து
பொதுமக்களிடையே பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன.
இது
குறித்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆராய்ச்சி மைய அலுவலர்
விஜயன்,வானில் ஏற்படும் சில மாற்றங்களால் அடிக்கடி விண்கற்கள் பூமியை
நோக்கி பாய்வது வழக்கமான ஒன்றுதான்.
அதேபோன்றுஇந்த நிகழ்வும் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது.
எனினும்(mateoroid) இந்த விண்கற்கள்விண்ணிலிருந்து பூமியை நோக்கி வரும்
வழியிலேயே சாம்பலாகி மறைந்து விடுவதும் உண்டு.சில நேரங்களில் பூமியை
தாக்கவும் செய்கிறது. ஆனால் இது சுமார் இரண்டாயிரம் அடிக்கு மேல் பயணம்
செய்திருக்க வாய்ப்புள்ளது. இது பூமியை தாக்கியதா அல்லது குறிப்பிட்ட
தொலைவில் சாம்பலாகி மறைந்ததா என்று தெரியவில்லை என கூறியுள்ளார்.
No comments:
Post a Comment