
கன்னியாகுமரி: சந்தியாவின் உடல் உறுப்புகளை மர்ம கும்பல்
திருடியிருக்கலாம் என்றும் இதில் தொடர்புடைய உண்மைக் குற்றவாளிகளைக் கைது
செய்ய வேண்டும். போலீஸார் திசை திருப்பும் செயலில் ஈடுபடக் கூடாது என்றும்
அவரது சகோதரி சஜிதா கூறியுள்ளார்.
சென்னை பள்ளிக்கரணை பகுதியில்
உடல் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் பிணமாக
கண்டெடுக்கப்பட்ட 40 வயது சந்தியாவின் தலை இன்னும் சிக்கிய பாடில்லை.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ஞாலம் கிராமத்தை சேர்ந்த
ராமச்சந்திரன் மற்றும் பிரசன்னா என்பவரது மகள்தான் சந்தியா.
இவரைக்
கொடூரமாக கொன்றதாக அவரது கணவர் பாலகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.
உடல் பாகங்கள் முழுமையாக கிடைக்கவில்லை.
அதை விட முக்கியமாக தலை இன்னும் கிடைக்கவில்லை.
இந்த
கொலையில் பாலகிருஷ்ணன் மட்டும் இதில் சம்பந்தப்படவில்லை. இது போன்ற கொடூர
கொலையை ஒருவர் செய்திருக்க முடியாது. இதில் சதி இருப்பதாக அவரது உறவினர்கள்
கூற ஆரம்பித்துள்ளனர்.
சந்தியாவின் கை, கால்கள் மட்டுமே
கிடைத்துள்ளது. உடலின் முக்கிய பாகங்களான தலை மற்றும் உடல் பாகங்கள்
கிடைக்காததால் கொலையில் சந்தேகம் எழுந்துள்ளது. கண், கிட்னி, இதயம்
உள்ளிட்ட உடலுறுப்புக்காக சந்தியா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம்
எழுந்துள்ளதாகவும், இந்த சம்பவத்தில் பலர் ஈடுபட்டிருக்கலாம் எனவும்,
போலிஸ் இந்த வழக்கை திசை திருப்ப முயல்கின்றனர் எனவும் சந்தியாவின்
உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து அவரது சகோதரி சஜிதா
கூறுகையில், போலீஸ் தரப்பிலேயே இந்த சந்தேகத்தை சிலர் எழுப்பியுள்ளனர்.
எனவே தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
source: oneindia.com
No comments:
Post a Comment