
கான்பூர் அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் திறன் குறைவான குண்டு வெடித்ததால்
பரபரப்பு ஏற்பட்டது.
கான்பூர் - பிவானி இடையிலான கலிந்தி எக்ஸ்பிரஸ் ரயிலின் கழிப்பறையில் இந்த
குண்டு வெடித்தது. இதனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. வேறு அசம்பாவிதம்
ஏதும் நடக்கவில்லை என்றும் தகவல்கள் கூறுகின்றன.
இன்று இரவு ஏழு மணியளவில் பரஜ்பூர் ரயில் நிலையம் அருகே ரயில் வந்து
கொண்டிருந்தபோது குண்டுவெடிப்பு நடந்துள்ளது. பொதுப் பெட்டியில் உள்ள
கழிப்பறையில் குண்டு வெடித்ததாக தெரிய வந்துள்ளது. குண்டுவெடிப்பில்
கழிப்பறை சேதமடைந்தது.
குண்டுவெடிப்பைத் தொடர்ந்து ரயில் முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. பயணிகளும், அவர்களின் உடமைகளும் சோதனையிடப்பட்டன.
முன்னதாக இன்று காலை தானே அருகே இதேபோல காஷ்மிரா சாலையில் ஒரு திறன் குறைவான குண்டுவெடித்த சம்பவம் நிகழ்ந்தது நினைவிருக்கலாம்.
No comments:
Post a Comment