
2019 லோக்சபா தேர்தலில் பாஜகவிற்கு மெஜாரிட்டி கிடைக்காது, காங்கிரஸ்
கட்சியே மாநில கட்சிகளின் உதவியுடன் ஆட்சி அமைக்கும் என்று பிட்ச்
சொல்யூஷன் மேக்ரோ ரிசர்ச் நிறுவனம் ( Fitch Solutions Macro Research)
தெரிவித்து இருக்கிறது.
லோக்சபா தேர்தல் நெருங்கிவிட்டது. தேர்தல் நடப்பதற்கு 100 நாட்களுக்கு
குறைவாகவே இருக்கிறது. இந்த நிலையில் லோக்சபா தேர்தல் தொடர்பாக நிறைய
கருத்து கணிப்புகள் வெளியாகி வருகிறது.
இதுவரை வெளியான பெரும்பாலான கருத்து கணிப்புகளில் எந்த கட்சிக்கும்
லோக்சபாவில் மெஜாரிட்டி கிடைக்காது என்று கூறப்பட்டு இருக்கிறது.
பெரும்பாலும் தொங்கு சபையே உருவாகும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
கணிப்பு
இந்த நிலையில் தற்போது பிட்ச் சொல்யூஷன் மேக்ரோ ரிசர்ச் நிறுவனம் ( Fitch
Solutions Macro Research) இந்த லோக்சபா தேர்தல் குறித்து கருத்து கணிப்பு
வெளியிட்டு உள்ளது. அதன்படி இந்த லோக்சபா தேர்தலில் யாருக்கும் மெஜாரிட்டி
கிடைக்காது, பாஜக காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் மெஜாரிட்டி
கிடைக்காது என்று கணிப்பு வெளியிட்டுள்ளது.

காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்
அதே சமயம் மாநில கட்சிகளின் உதவியுடன் காங்கிரஸ் கட்சி இந்த முறை ஆட்சியை
பிடிக்கும். மாநில கட்சிகளுக்கு நெருக்கமாக காங்கிரஸ் கட்சி இருக்கிறது.
ஆனால் பாஜக மாநில தலைவர்களுடன் நட்பில் இல்லை. இதனால் காங்கிரஸ் ஆட்சி
அமைக்கவே அதிக வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
யாருக்கு பலன்
விவசாயிகள் அரசு மீது கொண்டிருக்கும் கோபம் பாஜகவிற்கு பெரிய பாதிப்பை
ஏற்படுத்தும். அது காங்கிரஸ் கட்சிக்கு அதிக பலன் அளிக்கும். ஆனால்
புல்வாமாவில் நடந்த தாக்குதல் பாஜகவிற்கே அதிக பலனை ஏற்படுத்தும். மக்கள்
மத்தியில் இதனால் தேசிய உணர்வு அதிகம் ஆகி உள்ளது என்று அந்த கணிப்பில்
கூறப்பட்டு இருக்கிறது.

யார் இவர்கள்
பிட்ச் சொல்யூஷன் மேக்ரோ ரிசர்ச் நிறுவனம் ( Fitch Solutions Macro
Research) உலகம் முழுக்க தேர்தல் குறித்தும் அரசுகள் குறித்தும் கருத்து
கணிப்பு வெளியிடும் நிறுவனம் ஆகும். இவர்கள் வெளியிடும் கணிப்புகள் எப்போது
மிக கட்சிதமாக இருக்கும் என்று கூறுவார்கள். உலக அரசியலை மையமாக வைத்தும்,
பொருளாதார மாற்றங்களை மையமாக வைத்தும் இந்த நிறுவனம் மிக சரியாக கணிப்பு
வெளியிடும்.
No comments:
Post a Comment