
நெல்லை அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஐந்து பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர்.
நெல்லை
- சாத்தூர் அருகே வரகனுரில் இந்த சம்பவம் நடைபெற்று இருக்கிறது. அங்கு
இயங்கி வரும் பட்டாசு ஆலையில் இன்று காலை இந்த விபத்து ஏற்பட்டது. விபத்தை
தொடர்ந்து அருகே இருந்த சிறிய சிறிய ஆலைகளிலும் இந்த விபத்து பரவ
தொடங்கியது.
இதனால் வரிசையாக நிறைய கட்டிடங்கள் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.
இதையடுத்து அங்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்க
முயன்றனர்.
ஆனால்
தீ வேகமாக பரவுவதால் அங்கு மீட்பு பணி மிகவும் சிரமமாக இருக்கிறது.
தொடர்ந்து பட்டாசு வெடித்துக் கொண்டிருப்பதால் மீட்பு பணி செய்வதில் தாமதம்
ஏற்பட்டுள்ளது.
வரகனுரில்
பட்டாசு ஆலையில் ஏற்பட்ட இந்த வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்து
இருக்கிறது. உள்ளே ஆலையில் இன்னும் நிறைய பேர் சிக்கி இருக்கிறார்கள்.
இவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. விபத்தில் காயமடைந்தவர்கள் தற்போது
அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
No comments:
Post a Comment