
கடப்பேரி துணைமின்நிலையத்தில் டிரான்ஸ்பார்மர் வெடித்ததால், தாம்பரம்
மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சேவை கடுமையாக
பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை தாம்ரபத்தை அடுத்துள்ள கடப்பேரி பகுதியில் 230 கிலோவாட் கொண்ட
டிரான்ஸ்பார்மர் உள்ளது. மாலை 5.30 மணி அளவில் அந்த டிரான்ஸ் பார்மர்
திடீரென வெடித்து சிதறியது.
கொழுந்துவிட்டு தீ எரிந்ததால், பொதுமக்கள் அலறினர். அதிர்ச்சியடைந்த
மின்வாரிய ஊழியர்கள் துரிதமாக களத்தில் இறங்கினர். கடப்பேரி பகுதியில்
மின்சாரம் வினியோகிக்கப்படும் பகுதிகளில் உடனடியாக மின்சாரம்
துண்டிக்கப்பட்டது.
விபத்து குறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த அவர்கள் 30 நிமிடம் போராடி தீயை
கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த சம்பவத்தால் தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்
வினியோகம் பாதிக்கப்பட்டது. தாம்பரம் பகுதியே இருளில் மூழ்கியது.
நுங்கம்பாக்கம், தாம்பரம் இடையேயான மின்சார ரயில் சேவையும்
பாதிக்கப்பட்டது. ஸ்ரீபெரும்புதூரிலும் பகுதியாக மின்சாரம் பாதிக்கப்பட்டு
இருப்பதாக மின்வாரிய ஊழியர்கள் கூறியிருக்கின்றனர்.
No comments:
Post a Comment