
மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக அரசால் வேலையில்லாமல் இளைஞர்கள்
தவிப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
டெல்லியில் மைதானத்தில் மாணவர்களிடையே ராகுல்காந்தி உரையாற்றினார். அப்போது
அவர் கூறியதாவது:நாட்டின் வளம் அனைத்தும் சில தனி நபர்களின் கைகளில்
உள்ளது. தொழிலதிபர்களின் வசதிக்காகவே கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.
தொழிலதிபர்களுக்கு மட்டுமே பாஜக அரசு உதவுகள் செய்கிறது. ஆனால்
கல்விக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதில்லை. மாணவர்களின் கல்விக் கடனை ஏன்
ரத்து செய்யவில்லை.
மத்தியில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், பட்ஜெட்டில் கல்விக்கான
நிதி அதிகரிக்கப்படும். வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு தியாகி அந்தஸ்து
வழங்கப்படும்.
வேலைவாய்ப்பு இல்லாமல் இந்தியாவில் இளைஞர்கள் பெரும் நெருக்கடிக்கு
ஆளாகியுள்ளனர். ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் ஒப்பிடுகையில், நமது
நாட்டில் வேலைவாய்ப்பின்மை பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது.
இந்தியாவில் 24 மணி நேரத்தில் 450 வேலைவாய்ப்புகள் மட்டுமே
உருவாக்கப்படுகிறது. ஆனால், சீனாவில் 24 மணி நேரத்தில் 50 ஆயிரம்
வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன. நிதி அமைச்சகம் சார்பில் தாக்கல்
செய்யப்பட்ட விவரங்களில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
No comments:
Post a Comment