
குட்டிக்கரணம் அடித்தாலும் தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது என்று
திமுக தலைவர் ஸ்டாலின் கூறினார்.
கிருஷ்ணகிரியில் ரஜினி ரசிகர் மன்றத்தினர், மாற்றுக்கட்சிகளை சேர்ந்த 20
ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இணைப்பு
விழா நிகழ்ச்சியின் போது ஸ்டாலின் பேசியதாவது:
இது இணைப்பு விழா அல்ல. ஒரு மாநாடு போன்று எனக்கு தோன்றுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாற்றுக் கட்சியை சேர்ந்த 20,000 பேர் திமுகவில்
இணைந்திருக்கின்றனர்.
பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அதிமுகவினர்
துரோகம் இழைத்துள்ளனர். குட்டிக்கரணம் அடித்தாலும் தமிழகத்தில் பாஜக
காலூன்ற முடியாது.
ராகுல்காந்தி
இவரைப் பற்றி தெரிந்து கொள்க
ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து விலகியவர்கள் திமுகவில் இணையும்
நிகழ்வு முக்கியமான தருணம். மீண்டும் கூறுகிறேன்.. தமிழகத்தை பொறுத்த
வரையில் பிரதமர் வேட்பாளர் ராகுல் தான்.ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக
சார்பில் ஒரு இரங்கல் கூட்டமாவது நடைபெற்றுள்ளதா என்று பேசினார்.
No comments:
Post a Comment