
நாடு முழுவதும் 10 கோடியே 74 லட்சம் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு தலா
ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு அளிக்கும் ‘ஆயுஷ்மான் பாரத்–பிரதம மந்திரி
மக்கள் ஆரோக்கிய திட்டம்’, கடந்த மாதம் 23–ந் தேதி தொடங்கப்பட்டது.
ஆதார் குறித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்த நிலையில், இந்த
திட்டத்துக்கு ஆதார் தேவையா? என்பது குறித்து திட்டத்தை அமல்படுத்தும்
தேசிய சுகாதார நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி இந்து பூஷண் விளக்கம்
அளித்தார்.
அவர் கூறுகையில், ‘‘இந்த திட்டத்தில்
முதல்முறையாக சிகிச்சை பெற ஆதார் எண் கட்டாயம் அல்ல. ஆதார் எண்ணையோ அல்லது
வாக்காளர் அட்டை போன்ற அடையாள ஆவணங்களையோ அளித்து பலன் பெறலாம். ஆனால்,
இரண்டாவது முறையாக சிகிச்சை பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயம் ஆகும். ஆதார்
எண்ணையோ அல்லது ஆதாருக்கு பதிவு செய்ததற்கான ஆவணங்களையோ சமர்ப்பிக்க
வேண்டும்’’ என்றார்.
No comments:
Post a Comment