மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்துக் கொண்ட பேரணியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
மத்திய
பிரதேச மாநிலத்தில் தற்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல்
பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அதை ஒட்டி அவர் ஒரு பேரணியில் கலந்துக்
கொண்டார். அவருடன் காங்கிரஸ் பிரமுகர்களான கமல்நாத் மற்றும் ஜோதிராதித்யா
சிந்தியா ஆகியோரும் ஒரு ஜீப்பில் சென்றுக் கொண்டிருந்தனர்.
ஏராளமான
கூட்டத்தின் நடுவில் இந்த ஜீப் சென்ற வழியில் வாகனத்துக்கு சில மீட்டர்
தள்ளி ஒருவர் ஒரு பெரிய விளக்கை எடுத்து ராகுலுக்கு ஆரத்தி எடுத்துள்ளார்.
அப்போது அலங்காரத்துக்காக அருகில் கட்டப்பட்ட கேஸ்
பலூனில் தீப்பிழம்பு பட்டு வெடித்து தீயின் நாக்குகள் பரவி உள்ளன.
சமயோசிதமாக செயல்பட்ட அக்கம்பக்கத்தினர் தீயை உடனடியாக அணைத்துள்ளனர்.
அதிர்ச்சி
அடைந்த மக்கள் அங்கும் இங்கும் ஓடி உள்ளனர். இந்த நிகழ்வுக்கு மிக அருகில்
சென்ற ராகுல் காந்தி எந்த அபாயமும் இன்றி உயிர் தப்பி உள்ளார். காங்கிரஸ்
கட்சி தலைவரான ராகுல் காந்திக்கு சரியான பாதுகாப்பு ஏற்பாடுகள்
செய்யப்படுவதில்லை என காங்கிரஸார் தொடர்ந்து குற்றம் கூறி வருவது தற்போது
மீண்டும் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மத்தியப் பிரதேச மாநில
காவல் துறை சூப்பிரண்ட் அதிகாரி அமித் சிங், "இதில் பாதுகாப்பு குறைபாடு
ஏதும் இல்லை. ராகுல் காந்திக்கும் மக்களுக்கும் இடையில் 15 அடிக்கும்
அதிகமான தூரம் இருந்தது. இந்த விபத்துக்கு காங்கிரஸ் தொண்டர்கள் தான்
முழுப் பொறுப்பாகும். அத்துடன் பலமுறை காங்கிரசார் ராகுல் காந்தியின் பயண
திட்டத்தை திடீரென மாற்றி விடுகின்றன்ர்" என தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment