
நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் திருமண
கோஷ்டியினர் சென்ற வாகனமும் மற்றொரு வாகனமும் பயங்கரமாக மோதிக் கொண்ட
விபத்தில் 20 பேர் பலியாகியுள்ளனர்.
நியூயார்க் மாகாணத்தின் ஸ்கொஹரியே என்ற நகரத்தில் இந்த விபத்து அமெரிக்க நேரப்படி சனிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் நடந்துள்ளது.
இந்தக் குட்டி நகரம் அல்பானி பகுதியிலிருந்து சுமார் 43 மைல் மேற்கு திசையில் அமைந்துள்ளது.
சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமாக உள்ள ஆப்பிள் பேரல் என்ற கஃபே அருகில் இந்த விபத்து நடந்துள்ளது.
மிகப் பெரிய சத்தத்தை கேட்ட தாகவும் இதைத்
தொடர்ந்து மக்கள் அலறி துடிக்கும் வேதனைக் குரல்கள் ஆங்காங்கே எதிரொலித்த
தாகவும் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தெரிவிக்கிறார்கள்.
திருமண
கோஷ்டியினர் சென்ற சிறப்பு வாகனம் மற்றொரு வாகனத்துடன் மோதியதில் இந்த
விபத்து நடந்துள்ளது என்றும் உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோர் குறித்த
தகவல்களை தற்போது வெளியிட முடியாது என்றும் நியூயார்க் மாகாண காவல்துறை
தெரிவித்துள்ளது. இதுதொடர்பான பிரஸ்மீட் ஒன்றுக்கு அமெரிக்க நேரப்படி
ஞாயிற்றுக்கிழமை மதியம் 3 மணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதில் தான்
முழு விவரங்களும் தெரியப்படுத்தப்படும்.
திருமண கோஷ்டியினரின்
வாகனம் மலைப்பகுதியில் இருந்து கீழே வேகமாக இறங்கி வந்த போது இந்த விபத்து
நடந்துள்ளது. ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி என்பதால் வாகனத்தில்
பயணித்தோர் மட்டுமின்றி, அப் பகுதியில் நடந்து சென்றோரும் கூட இதில்
பலியாகி இருக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது.
source: oneindia.com
No comments:
Post a Comment