
குழந்தையை கொன்ற தாய், கொலை செய்ததற்கு காரணமாக அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை,
வேளச்சேரி ஏரிக்கரை பகுதியில் வசித்து வரும் வெங்கண்ணா-உமா தம்பதி, கடந்த 2
ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனர். அவர்களது காதலின்
சாட்சியாக கடந்த மாதம் உமாவுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது.
சார்விக் என்ற பெயரிடப்பட்ட அந்த குழந்தையை உறவினர்கள்
பாசத்துடன் வளர்த்து வந்தனர். இந்நிலையில், நேற்று அதிகாலை உறக்கத்தில்
இருந்து எழுந்தபோது உமாவுக்கு அருகில் இருந்த குழந்தை காணாமல்போனது,
அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கதவு திறந்து இருந்ததால், உள்ளே
புகுந்த யாரேனும் குழந்தையை கடத்திச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின்
அடிப்படையில் காவல் நிலையத்தில் வெங்கண்ணா புகார் கொடுத்தார்.
இதுகுறித்த
விசாரணையின்போது, குழந்தையை பறிகொடுத்த சோகமும், பதற்றமும் இன்றி
காணப்பட்டதால், உமா மீது காவலர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஆரம்பத்தில்
முன்னுக்குப்பின் முரணான தகவல்களைக் கொடுத்த உமா, இறுதியில் குழந்தையை
ஏரியில் வீசி கொலை செய்ததை ஒப்புக்கொண்டதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.
இந்நிலையில் குழந்தையை கொன்றது ஏன்? என உமா அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.
குழந்தைக்கு பாலூட்டும்போது அவரது
மார்பகங்களில் வலி ஏற்பட்டுள்ளது. உமாவை பரிசோதித்த மருத்துவர்கள், வலியை
குறைப்பதற்காக மாத்திரைகளை கொடுத்துள்ளனர். ஆனால், மாத்திரைகளை
உட்கொண்டுவிட்டு பாலூட்டினால், குழந்தைக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படலாம்
எனக்கூறிய வெங்கண்ணா, அதற்கு தடை போட்டதாக கூறப்படுகிறது. தனது பிரச்னையை
யாரும் புரிந்துகொள்ளவில்லை என்ற மன உளைச்சலும், பாலூட்டும்போது ஏற்பட்ட
வலியாலும், குழந்தையை கொலை செய்ய முடிவெடித்து ஏரியில் வீசியதாக உமா
வாக்குமூலம் அளித்துள்ளார்.
No comments:
Post a Comment