
புலந்த் சாகிர், உத்திரப் பிரதேசம்
உத்திரப்பிரதேச
காவல்துறையை சேர்ந்த 5 துணை ஆய்வாளர் உட்பட 13 பேர் மீது வீடு புகுந்து
கொள்ளை அடித்ததாக 13 காவல்துறையினர் கைது செய்யப்பட்டனர்.
உத்திரப்பிரதேச
மாநிலத்தில் உள்ள ஒரு நகரம் புலந்த் சாகிர் ஆகும். இந்த நகரில் குஞ்சா
என்னும் பகுதியில் ஒரு காவல் நிலையம் அமைந்துள்ளது. இந்த நகரில் முகமது
முஸ்தகீம் என்பவர் வசித்து வந்தார். இவருடைய வீட்டுக்கு குஞ்சா காவல்
நிலையத்த சேர்ந்த 13 காவல்துறையினர் திடீரென வந்து சோதனை இட்டுள்ளனர்.
முகமது வீட்டில் போதைப் பொருள் இருப்பதாக சந்தேகத்தில் அவர் வீட்டில் சோதனை நடத்தியதாக அவர்கள் தெரிவித்துளனர்.
அப்போது அவருடைய வீட்டில் இருந்த பல விலை மதிப்புள்ள
பொருட்களையும் ரூ,84000 ரொக்கம் ஆகியவைகளை காவல்துறையினர் எடுத்துச்
சென்றுள்ளனர். அத்துடன் அவர் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த இரு மோட்டார்
சைக்கிள்களையும் எடுத்துச் சென்றுள்ளனர்.
இவை அனைத்தும் அருகில்
இருந்த ஒரு சிசிடிவி காமிராவில் பதிவாகி உள்ளது. அத்துடன் அவர்கள்
முகமதுவின் வீட்டில் போதைப் பொருட்களும் ஆயுதங்களும் இருந்ததாக கூறி கைது
செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட முகமதுவின் தாய் மீனா பேகம் தனது மகனை
காவல்துறையினர் அடித்து உதைத்ததாக தெரிவித்துள்ளார்.
முகமது அந்தப்
பகுதியில் ஒரு அமைப்பின் தலைவர் எனவும் அமைப்பின் உறுப்பினர்கள் அவரிடம்
கொடுத்து வைத்திருந்த பணம் தான் அந்த ரூ.84000 என மீனா கூறி உள்ளார்.
முகமதுவின் குடும்பத்தினர் இந்த விவரம் குறித்து பல காவல் நிலயங்களில்
புகார் அளித்துள்ளனர். யாரும் நடவடிக்கை எடுக்காததால் நேரடியாக மாவட்ட
நீதிபதியிடம் அவர்கள் முறையிட்டுள்ளனர்.
அதை ஒட்டி நீதிபதி இந்த
விவகாரத்தில் நேரடியாக தலையிட்டு அந்த காவலர்களை கைது செய்யுமாறு
உத்தரவிட்டுள்ளார். நீதிபதியின் உத்தரவை ஒட்டி 5 துணை ஆய்வாளர்கள் உள்ளிட்ட
13 காவலர்கள் மீது வழக்கு பதிந்து கைது செய்துள்ளனர். இந்த கைது நடவடிக்கை
சம்பவம் நடந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து நடைபெற்றுள்ளது.
No comments:
Post a Comment