தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெரு புதுப்பள்ளிவாசல்
நிர்வாகப் பராமரிப்பில் இருந்து வருகிறது பள்ளிவாசல் பின்புறம் அமைந்துள்ள
புதுப்பள்ளி குளம். சுமார் 1 ஏக்கர் பரப்பளவை கொண்டது. இக்குளத்திற்கு நீர்
ஆதாரமாக, சி.எம்.பி வாய்க்கால் மூலம் தவழ்ந்து வரும் ஆற்று நீர், அருகில்
உள்ள செட்டியா குளத்தில் நீர் நிரம்பியவுடன், வழிந்தோடி, அதன் இணைப்பில்
உள்ள புதுப்பள்ளி குளத்திற்கு வந்தடையும்.
ஒரு காலத்தில் பொதுமக்கள் ஆர்வமாக குளித்து மகிழ்ந்த இக்குளத்தில், தற்போது மழை நீரோடு, கழிவு நீர் நிரம்பி, பச்சை பாசிகள் படர்ந்து துர்நாற்றம் வீசிவருகிறது. இப்பகுதி வழியே செல்லும் ஆடு, மாடுகள் குளத்தில் தவறி விழுவதும், குளத்தில் குப்பைகள் கொட்டுவதும், குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர் குளத்தில் கலப்பதும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.
இந்நிலையில், இப்பகுதியை சேர்ந்த தன்னார்வலர்களின் நிதி உதவியில் தன்னார்வலர் சேக் நெய்னா மரைக்காயர் அவர்களின் மேற்பார்வையில் குளத்தில் சூழ்ந்துள்ள சேறு, சகதிகள் ஜேசிபி இயந்திரத்தின் மூலம் அகற்றும் பணி சில தினங்கள் நடந்து முடிந்துள்ளது.
இதுகுறித்து இப்பகுதியினர் கூறியது;
புதுப்பள்ளி குளத்தின் பணிகளை எடுத்துச்செல்லும் பெயர் சொல்ல விரும்பாத தன்னார்வலர்களுக்கு நன்றி. இதன் அடுத்தக்கட்டமாக, குளத்தை சுற்றி பாதுகாப்பு தடுப்பு அமைத்து, மரங்கள், செடிகள் நட்டு, மின் விளக்குகள், குடிநீர் வசதி, நடைமேடை, படித்துறை போன்றவற்றை அமைப்பதற்கான முயற்சியில் தன்னார்வலர்கள் ஈடுபட வேண்டும்' என்றனர்.

No comments:
Post a Comment