கோவை: மதக்கலவரத்தை ஊக்குவிக்கும் வகையிலும், பிரிவினைவாதத்தை
தூண்டும் வகையிலும் பேசிய அமீர் மற்றும் தனியரசு மீது நடவடிக்கை
எடுக்கக்கோரி காவல்துறை ஆணையரிடம் கோவை மாவட்ட பாஜக சார்பில் புகார்
அளிக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகர மாவட்ட பாஜக தலைவர் நந்தகுமார் இன்று கோவை மாநகர காவல்துறை
ஆணையரிடம் புகார் அளித்தார். அந்தப் புகாரில், நேற்று மாலை கோவையில்
தனியார் தொலைக்காட்சி சார்பில் விவாத நிகழ்ச்சி நடந்தது.
அதில் பேசிய இயக்குநர் அமீர், இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார்
கொலை வழக்கு சம்பந்தமாக மதக்கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசினார். இந்த
வழக்கில் தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தி வரும் நிலையில், அதை
குலைக்கும் வகையில் அவர் பேசியுள்ளார்.
அதேபோல, கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் தனியரசு பேசுகையில் தீவிரவாதத்தை
ஆதரித்தும், பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் வகையிலும் பேசியுள்ளார்.
எனவே தமிழகத்தில் மதக்கலவரம், பிரிவினைவாதத்தை ஆதரித்து பேசி கோவையின்
அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க
வேண்டும். இவ்வாறு அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment