கென்ய நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் டெல்லியில் 10 பேரால் கூட்டாக
சேர்ந்து கற்பழிக்கப்பட்ட கொடூரமான அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஒன்று
தலைநகரில் அரங்கேறியுள்ளது.
நாட்டின் தலைநகரான டெல்லியில்
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் வலுத்து
வருகின்றன.ஆமாம், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு டெல்லி மாணவி நிர்பயா,
பேருந்தில் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை
செய்யப்பட்டதுபோல கென்யாவை சேர்ந்த பெண் ஒருவர் 10 பேரால் கூட்டு
பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கென்ய நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர், டெல்லியில் வேலைபார்த்து வருகிறார்.
தெற்கு டெல்லி பகுதியில் உள்ள சத்தர்புரா பகுதியில் வாடகை வீட்டில் தங்கி வருகிறார்.
இந்நிலையில்
கடந்த புதன்கிழமை இரவு குருகிராமில் நண்பர்கள் வைத்த பார்ட்டியில் கலந்து
கொண்டார். இந்த பார்ட்டி முடிந்ததும் சதுர்பூர் வீட்டுக்குச் செல்வதற்காக,
எம்.ஜி.சாலையில் உள்ள பிரிஸ்டல் அருகே வாடகை கார் புக் செய்து
காத்திருந்தார்.
அப்போது, அவர் அருகே, ஒரு சொகுசு கார் வந்து
நின்றது. அதில் இருந்த மூன்று பேர் எங்கே போகணும் என கேட்டு தாங்கள்
இறக்கிவிடுவதாக கூறியுள்ளனர். நேரம் ஆனதால், வாடகைக் காரும் வராததால்,
அவர்களை நம்பி அந்த கென்ய பெண் அவர்களின் காரில் ஏறிச்சென்றார். அப்போது
காருக்குள் ஏறிய பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்த தொடங்கினர்.
பின்னர்
சிறிது தூரம் சென்றதும், அங்கே காருக்காக காத்திருந்த இரண்டு நண்பர்கள்
காரில் ஏறிக்கொண்டனர். அனைவரும் மதுபோதையில் மப்பில் இருந்துள்ளனர்.
இதனையடுத்து,
ஒரு வீட்டிற்கு முன் காரை நிறுத்திய அவர்கள் அந்தப் பெண்ணை உள்ளே இழுத்து
சென்று கூட்டாக பலத்தாகரம் செய்துள்ளனர். இதனையடுத்து, மேலும் 5 பேர் அங்கு
வந்துள்ளனர். அவர்களும் அந்த பெண்ணை அடுத்தடுத்து பாலியல் பலாத்காரம்
செய்துள்ளனர்.
இதையடுத்து அவர்களிடம் இருந்து தப்பித்த அந்த பெண்
ரோந்து சென்ற போலீசாரிடம் நடந்ததை அழுதுகொண்டே கூறியுள்ளார். இதுதொடர்பாக
வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், 3 பேரை கைது செய்துள்ளனர். குற்றம்
சாட்டப்பட்டவர்கள் அனைவருமே கட்டுமான பொருட்களை வேலைபார்ப்பவர்கள். அவர்கள்
கதா கிராமத்தில் அலுவலகத்தில் உள்ள அறை ஒன்றில் பெண்ணை பாலியல் பலாத்காரம்
செய்தது தெரியவந்துள்ளது.
3 பேரை கைது செய்துள்ள போலீசார், தலைமறைவான 2 பேரை தேடி வருகின்றனர்.
No comments:
Post a Comment