மனைவி ஏடிஎம் கார்டை கணவன் பயன்படுத்த கூடாது - நீதிமன்றம் அதிரடி
தீர்ப்பு
பெங்களூர்: மனைவியின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி கணவன் பணம் எடுத்தால், அது
தவறு என்று பெங்களூர் நுகர்வோர் நீதிமன்றம் வழக்கு ஒன்றில் தீர்ப்பு
வழங்கியுள்ளது.
பெங்களூரில் கடந்த 2013ல் வந்தனா என்ற பெண்ணின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி
அந்த பெண்ணின் கணவர் 25,000 ரூபாய் பணம் எடுத்துள்ளார். ஆனால் கணக்கில்
பணம் போனாலும், மிஷினைவிட்டு பணம் வெளியே வராமல் இருந்துள்ளது.
இதனால் வங்கியிடம் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் எஸ்பிஐ வங்கி பணத்தை
திருப்பி கொடுக்க மறுத்துவிட்டது. இதில்தான் இந்த வித்தியாசமான தீர்ப்பு
அளிக்கப்பட்டுள்ளது.
என்ன காரணம்
இதையடுத்து, அந்த தம்பதிகள் போலீசில் புகார் அளித்தனர். பின் நுகர்வோர்
நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தனர். அதில் எஸ்பிஐ நீதிமன்றம், பணம்
எடுக்கப்பட்டுவிட்டது, எங்களிடம் ஆதாரம் இருக்கிறது என்று அதற்கான
ஆதாரங்களை வெளியிட்டுள்ளனர். ஆனால் பணம் எங்களுக்கு வரவில்லை என்று தம்பதி
வாதாடி இருக்கிறார்கள்.
வீடியோ வெளியிட்டனர்
இதை நிரூபிக்க, அந்த தம்பதி தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அந்த
ஏடிஎம்மின் சிசிடிவி வீடியோ பதிவை வாங்கியுள்ளனர். அதில் அந்த நபர் பணம்
எடுக்கவில்லை என்பது நிரூபணம் ஆகியுள்ளது. இதை வைத்து அந்த தம்பதிகள்
வாதாடினார்கள். ஆனால் எஸ்பிஐ வங்கி இதை வைத்தே வழக்கை முடித்துள்ளது.
ஆதாரம் கொடுத்தார்
அந்த வீடியோவில் ஏடிஎம்மின் கார்டின் உரிமையாளர் இல்லை. அந்த பெண்
ஏடிஎம்கார்டை வேறு ஒருவரிடம் கொடுத்துள்ளார். சட்டப்படி இது தவறு. அதனால்,
இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றுள்ளது. எடுக்கப்பட்ட பணத்திற்கு
இதனால் ஏடிஎம் கார்டின் உரிமையாளர் உரிமை கோர முடியாது என்றுள்ளது.
இறுதி தீர்ப்பு
இந்த நிலையில் நுகர்வோர் நீதிமன்றம், இதில் இறுதி தீர்ப்பு வழங்கியுள்ளது.
அதன்படி மனைவியின் ஏடிஎம் கார்டை கணவன் பயன்படுத்தியது தவறு. பணம் எடுக்க
வேண்டும் சென்றால் செக் எழுதி கொடுத்திருக்க வேண்டும், இல்லையென்றால்,
அனுமதி கடிதம் கொடுத்திருக்க வேண்டும். ஒருவரின் ஏடிஎம் கார்டை இன்னொருவர்
பயன்படுத்தியது தவறு என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் அவர்களுக்கு
பணம் திருப்பி கொடுக்கப்படவில்லை.
No comments:
Post a Comment