சென்னை: நீட் தேர்வை எழுத எர்ணாகுளத்துக்கு அழைத்து சென்ற தந்தை
கிருஷ்ணசாமிக்கு திடீர் என மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் பரபரப்பு
ஏற்பட்டது.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி விளக்குடி
கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (47). அரசு ஊழியராவார். இவரது மகன்
கஸ்தூரி மகாலிங்கம். இவர் பிளஸ் 2 முடித்துள்ளார்.
நீட் தேர்வுக்கு
தமிழகத்தில் உள்ள தேர்வு மையத்தை தேர்ந்தெடுத்தும் அந்த மாணவருக்கு கேரள
மாநிலம் எர்ணாகுளத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து
கஸ்தூரி மகாலிங்கம், தனது தந்தை கிருஷ்ணசாமியுடன் நேற்று எர்ணாகுளம்
சென்றடைந்தார்.
அங்கு ஹோட்டல்களில் தங்கும் அறை கிடைக்காமல் அவர்கள் நீண்ட நேரம் அலைக்கழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஒரு வழியாக விடுதி கிடைத்தும் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு பின்னர் சரியானது.
இந்நிலையில்
இன்று காலையும் எர்ணாகுளத்தில் சம்மணத்தில் உள்ள நாலந்தா பப்ளிக்
பள்ளியில் ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்தை தேடி அலைந்து திரிந்தனர். பின்னர்
ஒரு வழியாக தேர்வு மையத்துக்கு வந்து தனது மகனை உள்ளே அனுப்பிவிட்டு அங்கு
ஒரு இடத்தில் கிருஷ்ணசாமி அமர்ந்திருந்தார்.
அப்போது அவருக்கு
மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து சிறிது நேரத்தில் அவர் இறந்தார். இதையடுத்து
அவரது உடல் அங்குள்ள மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இவர்களுடன் வேறு
யாரும் வரவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த விவரம் தெரியாமல் மகன்
தேர்வு எழுதுவதை அறிந்த மற்ற பெற்றோர் வேதனை தெரிவித்துள்ளனர். இது முழுக்க
முழுக்க அலைக்கழிப்பு, மனவேதனையால் ஏற்பட்ட மாரடைப்பு என்று பெற்றோர்
கூறியுள்ளனர்.
source: oneindia.com
No comments:
Post a Comment