சென்னை: தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு நீட் தேர்வு எழுத
செல்லும் மாணவர்கள் மற்றும் உடன் செல்லும் ஒருவருக்கு இலவச ரயில் மற்றும்
பேருந்து டிக்கெட் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
மருத்துவ
படிப்புகளுக்கான நீட் தேர்வு நாளை மறுநாள் நடைபெறுகிறது. இந்நிலையில்
தமிழகத்தில் போதுமான நீட் தேர்வுக்கான மையங்கள் அமைக்கப்படாமல் கேரளா,
ராஜஸ்தான் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதற்கு
கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் நீட் தேர்வு எழுத வெளி மாநிலங்களுக்கு
செல்லும் தமிழக மாணவர்களுக்கு அரசு செலவில் அழைத்து செல்ல முடிவு
செய்யப்பட்டுள்ளது. மாவட்ட கல்வி முதன்மை அலுவலகர்கள் மூலம் ரூ.1000 நிதி
உதவி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும் நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர் மற்றும் உடன் செல்லும்
ஒருவருக்கு பயணப் படியாக இரண்டாம் வகுப்பு ரயில் டிக்கெட் இலவசம் என்றும்,
டிக்கெட் பெற்றுக்கொள்ள பள்ளி தலைமை ஆசிரியர் மூலமாக முதன்மை கல்வி அலுவலரை
அணுகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வுக்கான நுழைவுச்
சீட்டு, அடையாள அட்டையை காட்டி மாணவர்கள் உதவித்தொகையை பெற்றுக் கொள்ளலாம்
என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
நீட் தேர்வு எழுத
வெளிமாநிலங்களுக்கு செல்லும் தமிழக மாணவர்கள் 14417 என்ற எண்ணில் ஆலோசனை
பெறலாம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
source: oneindia.com
No comments:
Post a Comment