
சென்னை: நீட் எழுத கேரளா செல்லும் மாணவர்களுக்கு உதவிகள் செய்ய தயார் என்று ஆர்கே நகர் தொகுதி எம்எல்ஏ டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
இந்த
முறை நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்கள் சிலருக்கு வடஇந்திய
மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இது மாணவர்களுக்கு
பெரிய அளவில் கஷ்டத்தை ஏற்படுத்தும். சிபிஎஸ்இ அறிவிப்பிற்கு எதிராக சென்னை
உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதில் சிபிஎஸ்இக்கு
எதிராக தீர்ப்பு வந்தது. ஆனால் இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ
மேல்முறையீடு செய்தது. தற்போது இதில் சிபிஎஸ்இ பிறப்பித்த உத்தரவு
சரிதான், நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்கு அண்டை மாநிலங்களில்தான்
தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
அவர் தனது
டிவிட்டில் ''கேரள மாநிலத்தில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அம்மா
மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக தங்குமிட வசதியும், தேர்வு மையத்தை
சுலபமாக அடையாளம் காண வழிகாட்டவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது''
என்றுள்ளார். மேலும் மக்களுக்கு தொடர்பு கொள்ள 4 பேரின் தொலைபேசி எண்கள்
கொடுக்கப்பட்டுள்ளது
அதில் 9363109303, 9994211705, 8903455757,
7373855503 என மொத்தம் நான்கு போன் நம்பர்கள் கொடுத்துள்ளார். மொத்தம்
மூன்று நபர்கள் இதற்காக பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.
source: oneindia.com
No comments:
Post a Comment