கிருஷ்ணகிரி அருகே ஓடிக்கொண்டிருந்த பெட்ரோல் டேங்கர் லாரி
தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தால்
பெங்களூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பெரும் போக்குவரத்து பாதிப்பு
ஏற்பட்டது.
ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி
கிருஷ்ணகிரி-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்துக் கொண்டுருந்தப்போது
டேங்கர் லாரியில் திடீர் ரென தீ பிடித்து எரிந்தால் லாரி ஓட்டுனர் மற்றும்
கிளீனர் வண்டியை அப்படியே சாலையில் நிறுத்திவிட்டு அங்கு இருந்து தப்பி
ஒடினார்கள்.
சூளகிரி அருகே இன்று மாலை நடைபெற்ற இந்த தீ விபத்து காரணமாக, சுமார் 10 கி.மீ தூரத்திற்கு வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
போக்குவரத்து அதிகம் காணப்படும், இந்த நெடுஞ்சாலையில் தீ விபத்து ஏற்பட்டதால் பிற வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
டேங்கர்
லாரி என்பதால் அது வெடித்து சிதறக் கூடும் என்ற அச்சத்தில் நெருப்பை
அணைக்க யாரும் அருகிலேயே போகவில்லை. இதனால்தான் வாகன போக்குவரத்து தடை
பட்டது.
ஹில்டாப் கிரானைட் என்ற நிறுவனம் மற்றும் கிருஷ்ணா இன் ஹோட்டல் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது.
source: oneindia.com
No comments:
Post a Comment