புவனேஷ்வர்: ஒரே நேரத்தில் தந்தையும், மகனும் உயர்நிலை பள்ளி இறுதி தேர்வில் வெற்றிப் பெற்றுள்ளது டாக் ஆப் சிட்டியாக மாறி உள்ளது.
ஒடிசாவில் தந்தை, மகன் ஒரே நேரத்தில் உயர்நிலை பள்ளி இறுதி தேர்வு எழுதி வெற்றி பெற்றதுடன் ஒரே மார்க்கும் பெற்றுள்ளனர்.
ஒடிசா
மாநிலம் பாலேசோர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அருண் குமார் பேஜ் (58). இவரது
மகன் பிஸ்வஜித் பேஜ் (30). அருண்குமார் 8-ம் வகுப்பு படித்த போது தனது
தந்தையை இழந்ததால் மேற்கொண்டு படிக்க முடியாமல் போனது.
அருண்
குமார் மகன் பிஸ்வஜித் 2004-ல் 10-ம் வகுப்பில் ஆங்கிலத்தில்
தோல்வியடைந்ததால் படிப்பை தொடர முடியவில்லை.
இந்நிலையில், அருண்குமாரும், விஸ்வஜித்தும் ஒடிசா மாநில திறந்த வெளி பள்ளி
ஆண்டு உயர்நிலை பள்ளி சான்றிதழ் தேர்வுகள் எழுத முடிவு செய்தனர்.
இருவருக்கும்
ஒரே தேர்வு மையம் எழுத ஹால்டிக்கெட் கிடைத்தது. நன்கு படித்து
தேர்வெழுதினர். கடந்த 7-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் தந்தை,
மகன் இருவரும் 500க்கு 342 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளனர்.
விடாமுயற்சியால் தந்தையும் மகனும் ஒன்றாக சேர்ந்து தேர்வானதற்கு அப்பகுதி
மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
No comments:
Post a Comment