நீட் குளறுபடியால் தமிழக அரசுக்கும், சிபிஎஸ்இ ஆணையத்துக்கும் மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அளித்துள்ளது.
டெல்லி:
நீட் குளறுபடி காரணமாக விளக்கம் அளிக்கக் கோரி தமிழக அரசுக்கும், சிபிஎஸ்இ
ஆணையத்துக்கும் மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அளித்துள்ளது.
நீட்
தேர்வு எழுத தமிழகத்தில் உள்ள 5000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு
ராஜஸ்தான், சிக்கிம், கேரளம் ஆகிய மாநிலங்களுக்கு தேர்வு மையம் ஒதுக்கீடு
செய்யப்பட்டிருந்தது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினர்.
அப்போது வெளிமாநிலங்களில் மாணவர்களுக்கு தேர்வு மையம் ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளதற்கு தடை விதிக்கப்பட்டது.
இதையடுத்து தேர்வு நடத்த
இன்னும் 2 நாட்களே உள்ளதால் தேர்வு மையங்களை மாற்றுவது சிரமம் என்று கூறிய
சிபிஎஸ்இ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. சிபிஎஸ்இ ஆணையத்தின்
விளக்கத்தை ஏற்ற உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்தின் தடையை நீக்கியது.
மனஉளைச்சல்
இதையடுத்து
நேற்று நாடு முழுவதும் 2255 மையங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. இதில் 13
லட்சம் மாணவர்கள் கலந்து கொண்டனர். தேர்வு மையத்தில் சிபிஎஸ்இ அதிகாரிகள்
மாணவர்களிடம் நடந்து கொண்ட விதத்தால் அவர்களுக்கு மனஉளைச்சல் ஏற்பட்டது.
டார்ச்லைட்
தீவிரவாதிகளை
போல் மாணவர்களை மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை நடத்தியதும், காதுகளுக்கு
ஏதேனும் கருவிகள் இருக்கின்றனவா என சரிபார்க்க டார்ச் லைட் அடித்து
பார்த்ததும், மாணவிகள் துப்பட்டா அணிந்து வரக் கூடாது உள்ளிட்டவற்றால்
மாணவர்கள் மட்டுமல்லாது பெற்றோர்களும் வேதனை அடைந்தனர்.
கிருஷ்ணசாமிக்கு மாரடைப்பு
திருவாரூர்
மாவட்டம் கஸ்தூரி மகாலிங்கத்துக்கு எர்ணாகுளத்தில் தேர்வு மையம் ஒதுக்கீடு
செய்யப்பட்டிருந்தது. இந்த மையத்தில் தனது தந்தை கிருஷ்ணசாமியுடன் தேர்வு
எழுத சென்றார் மகாலிங்கம். அப்போது மகனை தேர்வு எழுதும் அறையில் விட்டு
விட்டு விடுதிக்கு வந்த கிருஷ்ணசாமிக்கு மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். இது
பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
நோட்டீஸ்
இவர்
மட்டுமல்லாமல் நீட் எனும் அரக்கனால் சிவகங்கை மாணவி ஐஸ்வர்யா, கடலூர்
மாணவி சுவாதி ஆகியோரின் தந்தைகளும் மனஉளைச்சலால் உயிரிழந்தனர். பத்திரிகை
செய்திகளை ஊடகத்தில் பார்த்த தேசிய மனிதஉரிமை ஆணையம் தாமாக முன்வந்து
சிபிஎஸ்இ ஆணையத்துக்கும், தமிழக தலைமை செயலாளருக்கும் விளக்கம் கேட்டு
நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
எதற்கு விளக்கம்
அதில்
கிருஷ்ணசாமி மரணம் குறித்தும் மாணவர்கள் அலைக்கழிக்கப்பட்டது குறித்தும்,
வெளிமாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு குறித்தும் வருங்காலத்தில்
இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படும்
என்பது குறித்தும் விளக்கம் அளிக்குமாறு மனித உரிமைகள் ஆணையம் கேட்டுக்
கொண்டுள்ளது.
No comments:
Post a Comment