தேனாம்பேட்டையில் பேனர் வைத்த பிரச்னையில் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார்.
சென்னை
தேனாம்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி நகரை சேர்ந்தவர் மதன். இவர் தனது
நண்பர் மார்ட்டின் என்பவரின் திருமணத்திற்காக, அதே பகுதியில் பேனர்
வைத்துள்ளார். ஆனால் அந்த இடம் அரசியல் கட்சியினர் மற்றும் குறிப்பிட்ட
ரசிகர் மன்றத்தை சேர்ந்த சிலர் பேனர் வைக்கும் இடம் என்பதால், பிரச்னை
ஏற்பட்டுள்ளது.
இதனால்
மதன் வைத்த பேனரை அகற்ற வேண்டும் என அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள்
கூறியுள்ளனர். அதற்கு மதன் மாலை அல்லது நாளை அகற்றி விடுகிறேன் எனக்
கூறியுள்ளார். இவ்வாறு கூறிக்கொண்டே அகற்றமால் இருந்துள்ளார். இதனால்
ஆத்திரமடைந்த அரசியல் கட்சியினர், மதன் வீட்டிற்கு சென்று தகராறு
செய்துள்ளனர். அத்துடன் மதனையும் கத்தியால் தாக்க முயன்றுள்ளனர். இதில்
பதட்டமடைந்த மதன், ஓட ஆரம்பித்துள்ளார்.
ஆனால்
அவரை விரட்டிச் சென்ற 8 பேர் கொண்ட கும்பல், பேனர் வைக்கப்பட்ட இடத்தின்
அருகிலேயே வெட்டியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த மதன், பரிதாபமாக
உயிரிழந்தார். பின்னர் அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.
இதையடுத்து அங்கு மக்கள் கூட, மதன் நண்பர்களும் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
மதன் கொலை செய்யப்பட்டதால் ஆத்திரமடைந்த அவரது நண்பர்கள், அங்கு
நின்றுகொண்டிருந்த கொலை செய்தவர்களின் வண்டிகளை அடித்து நொறுக்கினர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், பதட்டத்தை குறைக்க மதன்
நண்பர்களை அழைத்துச்சென்றனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து,
குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
No comments:
Post a Comment