ஆடிட்டர்
குருமூர்த்தியை ரஜினியின் விளம்பர செயல்பாட்டாளர் என்று வேண்டுமானால்
அழைக்கலாம் என்று பாஜக மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி
விமர்சித்துள்ளார்.
சென்னை
நுங்கம்பாக்கத்தில் புதனன்று 'பிக்கி' அமைப்பு சார்பாக நடைபெற்ற
கருத்தரங்கு ஒன்றில் 'துக்ளக்' இதழின் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி
கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசும் பொழுது
கூறியதாவது:
ரஜினிக்கு நான் ஆலோசகராக
உள்ளேன் என்று கூறப்படுவது உண்மையாக இருந்தால் எனக்குப் பெருமைதான்.
தமிழகத்தில் உள்ள வெற்றிடத்தை ரஜினிகாந்த் நிரப்புவார் என
நம்புகிறேன்.ரஜினியும் மோடியும் ஒன்று சேர்ந்தால் தமிழ்நாட்டில் ஆட்சி
அமைக்கலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிலையில்
ஆடிட்டர் குருமூர்த்தியை ரஜினியின் விளம்பர செயல்பாட்டாளர் என்று
வேண்டுமானால் அழைக்கலாம் என்று பாஜக மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி
விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:
ஆடிட்டர்
குருமூர்த்தியை ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தவாதி என்று ஊடகங்களில் உள்ளவர்கள்
அழைக்கிறாரகள். ஆனால் அப்படி எந்த ஒரு பதவியும் ஆர்.எஸ்.எஸ்ஸில் இல்லை.
வேண்டுமானால் அவரை ரஜினிக்கான விளம்பர செயல்பாட்டாளர் என்றுதான் அழைக்க
வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment