உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் ஒருவர்,
மூத்த வழக்கறிஞரான சதீஷ் ஷர்மா என்பவர் தன்னை பாலியல் வன்கொடுமை
செய்ததாகவும், மூன்று ஆண்டுகளாக மனரீதியாக துன்புறுத்தியதாகவும் புகார்
அளித்துள்ளார். ஆனால், அவரது புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று
கூறப்படுகிறது.
இதனால்அந்த பெண் வழக்கறிஞர்,
பத்திரிகையாளர்கள் முன்னிலையில் தனது தலையை மொட்டை அடித்து தனது எதிர்ப்பை
தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,
‘மூத்த
வழக்கறிஞரும், பா.ஜ.க பிரமுகருமான சதீஷ் ஷர்மா என்னை பாலியல் வன்கொடுமை
செய்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக என்னை மனரீதியாகவும் துன்புறுத்தி
வருகிறார்.மேலும், என்னை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி வந்தார். என்னுடைய
தலைமுடி பாதியை அவர் வெட்டினார்.
மிகப்பெரிய
தலைவராக இருப்பதால் அவர் தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி எனது
குடும்பத்தினரை மிரட்டுகிறார்.நான் ஒரு தலித்தாக இருப்பதனால்தான் இந்தப்
பிரச்சினைகளை எல்லாம் சந்திக்க வேண்டியுள்ளது. காசிப்பூர் காவல்நிலையத்தில்
சதீஷ் ஷர்மா மீது புகார் தெரிவித்துள்ளேன். ஆனால், காவல்துறையினர்
என்னிடம் ஏதாவது காரணங்கள் கூறி வருகின்றனர்.எனது குடும்பத்தினருக்கு கொலை
மிரட்டல் வருகிறது. பணத்தை கொடுத்து இந்த விவகாரத்தை மூடி மறைக்க
பார்க்கின்றார்கள்’ என தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment