
சென்னை: நீட் தேர்வு எழுத போதிய மையங்கள் அமைக்காததால், கணிசமான தமிழக
மாணவ, மாணவிகள் ராஜஸ்தான், கேரளா என அலைக்கழிக்கப்படுகிறார்கள்.
இதில்
கேரளாவிலுள்ள மையங்களுக்கு ஒதுக்கப்பட்டவர்களைவிட பல ஆயிரம் கி.மீ
தொலைவிலுள்ள ராஜஸ்தானில் மையம் ஒதுக்கப்பட்டவர்கள் நிலை மிக மோசம்.
அவசரத்திற்கு
ரயில் கூட கிடைக்காத நிலையில் விமானங்களில் பயணித்து நாளை மறுநாள் நடைபெற
உள்ள தேர்வில் பங்கேற்க வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளனர்.
மொழி
தெரியாத ஊரில் அவர்கள் படும் கஷ்டத்தை போக்க ஜெய்ப்பூரிலுள்ள ராஜஸ்தான்
தமிழ்ச் சங்கம் முன் வந்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்ச்சங்க உறுப்பினரும்,
அரசு அதிகாரியுமான டாக்டர். ஆர்.வெங்கடேஸ்வரனிடம் 'ஒன்இந்தியாதமிழ்'
சார்பில் பேசினோம்.
அவர் கூறுகையில், 'நீட் எழுத ராஜஸ்தான் வரும் தமிழக மாணவ,
மாணவிகள், தங்குமிடம், உணவு, போக்குவரத்து, மையங்களை கண்டுபிடிப்பது போன்ற
விஷயங்களில் ராஜஸ்தான் தமிழ்ச் சங்கம் சார்பில் உதவ தயாராக இருக்கிறோம்'
என்றார்.
உதவி தேவைப்படுவோர் இந்த தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்:
முருகானந்தம்: 9790783187
சவுந்தரவல்லி: 8696922117
பாரதி: 7357023549
வெங்கடேஸ்வரன்: 9829211111
source: oneindia.com
No comments:
Post a Comment