
தமிழ் சினிமாவில், பிரபல நடிகராக இருக்கும் பிரசன்னா சமீப காலமாக சமூக
சேவை மற்றும் மக்களுக்கு உதவிகள் செய்வதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
அந்த வகையில் கடந்த ஆண்டு, வறட்சியால் பதிக்கட்ட விவசாயிகளுக்கு தங்களால்
முடிந்த உதவியை செய்தனர் சிநேகா மற்றும் பிரசன்னா.
மேலும்
தற்போது, நீட் தேர்வு எழுத வெளியூருக்கு செல்லும், வறுமை கோட்டிற்கு கீழ்
உள்ள கிராமப்புற ஏழை மாணவர்கள் மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு, வெளியூர்
செல்லும் பயணசெலவு உள்ளிட்ட உதவிகளை தன்னால் முடிந்தவரை இரண்டு
மாணவர்களுக்காவது செய்வேன் என கூறியுள்ளார்.
இதனால் உதவி தேவைப்படும் மாணவர் தன்னை இன்பாக்சில் தொடர்பு
கொள்ளுமாறும், மாணவர்கள் அவர்களுடைய ஹால் டிக்கெட் மட்டும் செல்லும் இடம்
உள்ளிட்டவைகளை தங்களுக்கு அனுப்புமாறும் கூறியுள்ளார்.
நீட்
தேர்வு எழுத வெளியூருக்கு செல்ல வசதி இல்லாத மாணவர்களை நினைத்து, நடிகர்
பிரசன்னா முதல் ஆளாக யோசித்து இப்படி ஒரு பதிவை ட்விட்டரில் போட்டுள்ளார்
பிரசன்னா, இவரின் செயல் ரசிகர்களிடம் பாராட்டைப் பெற்றுள்ளது. இப்படி பலர்
மாணவர்களுக்கு உதவி செய்ய முன்வந்தால் அனைத்து மாணவர்களுக்கும் நல்ல
முறையில் தேர்வு எழுதுவார்கள் என்று கூறப்படுகிறது.
No comments:
Post a Comment