
ஸ்ரீநகர்:
காஷ்மீர்
மாநிலத்தில் 87 வயது மூதாட்டி ஒருவர், தனது வீட்டினரின் தேவைக்காக தனி
ஒருவராக கழிப்பறையை கட்டி சாதனை படைத்துள்ளார். அந்த மூதாட்டியின்
செயலுக்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.
நாடு முழுவதும்
ஸ்வாச் பாரத் திட்டத்தின்படி, திறந்தவெளி கழிப்பிடங்களை ஒழிக்க மத்தியஅரசு
தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதன்படி கிராமங்கள் தோறும் வீடுகளில் கழிவறை
கட்ட நிதி உதவியும் வழங்கி வருகிறது.
இந்நிலையில், காஷ்மீர்
மாநிலத்தில் உதாம்பூர் மாவட்டம் அருகே உள்ள பாலாலி கிராமத்தில், ராக்கி
என்ற 87 வயதான மூதாட்டி தனது வீட்டின் அருகே ஒரு கழிவறை கட்டி நாட்டு
மக்களுக்கு முன்மாதிரியாக உயர்ந்துள்ளார்.
இதுகுறித்து கூறிய அந்த மூதாட்டி, தான் ஏழை என்பதால் என்னிடம்
கழிவறை கட்ட பணம் இல்லை. எனவே கட்டுமானக் கருவி, மற்றவர்களின் உதவியுமின்றி
என் கைகளால் கழிவறை கட்ட முடிவெடுத்தேன்.
எனது செயலுக்கு உதவியாக,
எனது மகன் தேவையான அளவு மண் எடுத்து வந்ததாகவும், அதன்மூலம் செங்கல்லை
கொண்டு கழிவரற கட்டியதாகவும், இதற்காக தனக்கு 7 நாட்கள் தேவைப்பட்டது கூறி
உள்ளார்.
மூதாட்டியின் இந்த செயல் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
No comments:
Post a Comment