
சென்னை: நீட் தேர்வு எழுத வெளி மாநிலங்களுக்குச் செல்ல வேண்டிய நிலையில் இருக்கும் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் உதவிகள் குவிந்து வருகின்றன.
அந்த வகையில், ராஜஸ்தான் தமிழ் சங்கம் சார்பில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவ முன் வந்துள்ளது.
அவர்களது நிர்வாகிகளின் தொடர்பு எண்களும் அளிக்கப்பட்டுள்ளது.
அதில்,
முருகானந்தம் - 98790783187
சௌந்தரவல்லி - 86969 22117
பாரதி - 7357023549
***
தமிழக அரசின் உதவி
நீட் தேர்வு எழுத வெளி மாநிலங்கள் செல்லும் மாணவர்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் நுழைவு சீட்டைக் காட்டி ரூ.1000 முன்பணம் பெற்றுக் கொள்ளலாம் என்றும், இலவச ரயில் டிக்கெட் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
***
இதே போல, வெளி மாநிலத்தில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவ அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் முன்வந்துள்ளது.
கேரளாவில் தேர்வெழுதும் மாணவ, மாணவிகள் உதவிக்கு தொடர்பு கொள்ள வேண்டிய செல்பேசி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, பொற்காலராஜா - 9363109303, ராகேஷ் - 9994211705
பாப்புலர் வி. முத்தையா - 8903455757/7373855503
***
அரசுப் பள்ளியில் படித்த அல்லது ஏழை மாணவர்கள் இரண்டு பேர் வெளி மாநிலத்தில் சென்று நீட் தேர்வெழுதத் தேவையான உதவிகளை செய்ய தான் தயாராக இருப்பதாக நடிகர் பிரசன்னா தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
ஹால்
டிக்கெட்டுடன் டிவிட்டரில் தன்னை தொடர்பு கொண்டால் உடனடியாக ரயில்
டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
***
நீட்
தேர்வெழுத வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருக்கும் மாணவ,
மாணவிகளில் பல பேர் பொருளாதார மற்றும் பல காரணங்களால் வெளி
மாநிலங்களுக்குச் செல்ல முடியாமல் தவித்து வந்தனர்.
ராஜஸ்தான்
மற்றும் கேரளா போன்ற வெளி மாநிலங்களுக்குச் செல்ல வேண்டிய மாணவர்கள்
பலரும் இன்று அல்லது நேற்றே ரயில் மூலமாகப் புறப்பட்டும் விட்டனர். இந்த
நிலையில், செய்வதறியாது இருக்கும் மாணவ, மாணவிகளுக்கு உதவும் வகையில்
தமிழகத்தின் பல்வேறு தரப்பட்ட மக்களிடம் இருந்து உதவிகள் குவிந்து
வருகின்றன.
உடுக்கை இழந்தவன் கைபோல
ஆங்கே எனும் மொழிக்கு ஏற்ப, உரிய நேரத்தில் தமிழக மாணவர்களுக்கு பல
தரப்பட்ட இடங்களில் இருந்து உதவிகள் குவிந்து வருவது வரவேற்கத்தக்கதாக
உள்ளது.
உதவ முன்வந்திருப்போருக்கு மனமார்ந்த பாராட்டுகளும், நன்றிகளும் உரித்தாகுகின்றன.
No comments:
Post a Comment