மலேசியா: சட்ட விரோதமாக டேங்கர் கப்பலில் செல்ல முயன்ற இலங்கையை சேர்ந்த 131 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியா
மற்றும் நியூசிலாந்திற்கு டேங்கர் கப்பல் மூலம் சட்டவிரோதமாக செல்ல முயன்ற
இலங்கையை சேர்ந்த 131 பேர் மலேசியாவில் போலீசாரால் கைது
செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மே 1ம் தேதி தன்ஜூங் ஜமக் என்ற பகுதியில் இந்த கைது சம்பவம் நடந்ததான மலேசிய காவல்துறை தனது அறிக்கையில் உறுதிச் செய்துள்ளது.
கைது
செய்யப்பட்டவர்களில் 98 ஆண்கள், 24 பெண்கள், 4 சிறுவர்கள், 5 சிறுமிகள்
உள்ளனர்.
இவர்கள் சிங்களவர்களா?அல்லது ஈழத்தமிழர்களா? என்பது இன்னும் உறுதிச்
செய்யப்படவில்லை. இக்கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 'இட்ரா' என்ற டேங்கர்
கப்பலையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த
இலங்கையர்களை கைமாற்ற பயன்படுத்தப்பட்ட மீன்பிடிப் படகு ஒன்றும்,
அதிலிருந்து 3 இந்தோனேசியர்களும, 4 மலேசியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த ஆட்கடத்தலில் தொடர்புடைய மேலும் 5 மலேசியர்கள் கைது
செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment