
'முத்தலாக் வழக்கை அரசியல் சாசன
அமர்வு விசாரித்து வருகிறது. அதே போல அயோத்தி வழக்கையும் அரசியல் சாசன
அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்று மூத்த வக்கீல் வாதம் செய்துள்ளார்.
அயோத்தி
வழக்கில் கடந்த 2010ம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பை மறு ஆய்வு
செய்யக்கோரும் விவகாரத்தை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற முஸ்லிம்
அமைப்புகள் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த
வழக்கு விசாரணை, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்
விசாரணைக்கு வந்தது. வாதத்தின் போது மூத்த வக்கீல் ராஜீவ் தவான்
கூறுகையில், 'முத்தலாக் வழக்கை அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.
அதே போல அயோத்தி வழக்கையும் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற வேண்டும்.
ஏனெனில் முத்தலாக் வழக்கை விட அயோத்தி வழக்கு முக்கியமானது' என்றார்.
இந்த விஷயத்தில் அனைத்து தரப்பினரின் கருத்துகளை கேட்ட பின் தான் முடிவு எடுக்க முடியும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment