
கா விரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி கத்தார் வாழ் தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில்
அமையவுள்ள நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஸ்டெர்லைட்
ஆலையை மூடக் கோரியும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும் பெரும்
போராட்டம் நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள்
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. அதேபோல், உலகம் முழுக்க பரவிக் கிடக்கும்
தமிழர்கள் பல்வேறு நாடுகளிலும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். வளைகுடா
நாடான கத்தார் தலைநகர் தோகாவிலும் தமிழர்கள் நேற்று போராட்டத்தில்
ஈடுபட்டனர். பல்வேறு பிரிவுகளாகப் பிரிந்து தமிழர்கள் அங்கே போராட்டம்
செய்தனர்.
தோகாவில்
உள்ள அபு ஹாமர் பகுதியில் திரண்ட 100-க்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தில்
ஈடுபட்டனர், `ஸ்டெர்லைட்டை தடை செய்' `காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க
வேண்டும்', `நியூட்ரினோ திட்டம் கொண்டு வரக் கூடாது' என்பன போன்ற
பதாகைகளைப் போராட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர். மேலும், ``பணத் தேவைக்காக
உலகத்தின் எந்த மூளைக்குச் சென்றாலும் எங்கள் தாய் மடி தமிழ்நாடே... தாய்
தந்தையின் நலனுக்காக இங்கு வந்தோமே தவிர, எங்கள் தாய் நாடான தமிழ்
நாட்டுக்கு எதிரான எந்த ஒரு திட்டங்களையும் கால் ஊன்ற ஒருபோதும் அனுமதிக்க
மாட்டோம். எங்கு இருந்தாலும் நாங்கள் தமிழர்கள்'' என்று அவர்கள்
கோஷமிட்டனர்.
No comments:
Post a Comment