
தென் இந்தியாவிலேயே சிறந்த அரசியல்வாதிகளை கொண்ட மாநிலம் எது
என்ற கேள்விக்கு 'ஒன் இந்தியா தமிழ்' வாசகர்கள் சுவாரசியமான பதிலை
அளித்துள்ளனர்.
தென் இந்தியாவின் வரிப் பணத்தில் வட இந்தியா
வாழ்ந்து வருவதாக கலக குரல்களை ஆந்திரா, கர்நாடகா முதல்வர்கள்
எழுப்பியுள்ளனர். கேரள நிதி அமைச்சரும் இதே குரலை எதிரொலிக்கிறார். தென்
மாநில நிதி அமைச்சர்கள் ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்புவிடுத்துள்ளார்.
இந்த
நிலையில், தென் மாநில அரசியல்வாதிகளிலேயே சிறந்தவர்கள் யார்? என்ற
கேள்வியை 'ஒன்இந்தியா தமிழ்' வெப்சைட்டில் முன் வைத்தோம். தமிழகம் உள்ளிட்ட
தென் மாநிலங்களின் பெயர்களையும் அதில் குறிப்பிட்டோம்.
தமிழக நிலை
தமிழகத்திற்கு 3வது இடம்
தமிழகத்திற்கு 3வது இடம்
நமது வாசகர்கள் பதிவு
செய்த வாக்குகள் அடிப்படையில், எந்த தென் மாநில அரசியல்வாதிகள் சிறப்பாக
செயல்படுகிறார்கள் என்பதை நீங்களே பாருங்கள். முதலில் தமிழகம். தமிழக
அரசியல்வாதிகள்தான் சிறப்பாக செயல்படுவதாக 14.98 சதவீதம் பேர்
வாக்களித்துள்ளனர். இந்த பட்டியலில், 3வது இடத்தை பிடித்துள்ளது தமிழகம்.
அப்படியானால், முதல் 2 இடங்கள் யாருக்கு என கேட்கிறீர்களா. அதையும்
அடுத்தடுத்து பாருங்கள்.
குறைவு
கர்நாடகா கம்மி
பட்டியலில்
கர்நாடகாவுக்கு ஆதரவாக 2.96 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். காவிரி
நதிநீர் உள்ளிட்ட தங்கள் மாநில உரிமை விவகாரங்களில் அம்மாநிலம் பிடிவாதமாக
இருந்தாலும் தமிழகத்திற்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளதாலோ என்னவோ
அம்மாநில அரசியல்வாதிகளுக்கு இவ்வளவுதான் ஓட்டு கிடைத்துள்ளது.
கேரளா, ஆந்திரா
கேரளாவுக்கு முதலிடம்
கேரளாவுக்கு முதலிடம்
இந்த
பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது பினராயி விஜயன் ஆளும் கேரளா. கேரள
அரசியல்வாதிகள் சிறப்பானவர்கள் என 36.12 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.
இதற்கு அடுத்த இடம் சந்திரபாபு நாயுடுவின் ஆந்திராவுக்கு. ஆந்திர
அரசியல்வாதிகள் சிறப்பானவர்கள் என 22.28 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.
கேரளாவுடன் முல்லை பெரியாறு, ஆந்திராவுடன் செம்மர கடத்தல் துப்பாக்கி சூடு
என விவகாரங்கள் இருந்தாலும், அம்மாநில அரசியல்வாதிகள் சிறப்பாக செயல்பட்டு
தங்கள் மாநில உரிமைகளை பாதுகாப்பதாக நமது வாசகர்கள் கருதுவதே இதற்கு
காரணம்.
தெலுங்கானா இந்த பட்டியலில் சந்திரசேகர் ராவ் ஆளும் தெலுங்கானா 4.76 சதவீத வாக்குகளுடன் உள்ளது. யாருமே பெஸ்ட் இல்லை என 16.61 சதவீதம் பேர் கூறியுள்ள நிலையில், எல்லாருமே சூப்பர்தான் என 2.29 சதவீதம் பேர் கூறியுள்ளனர். இதில் இருந்து நமது மக்களின் மனநிலை உங்களுக்கும் புரிந்திருக்கும் அல்லவா.
No comments:
Post a Comment