
கோழிக்கோடு: காஷ்மீர் சம்பவத்தில் கொடூரமாக கொல்லப்பட்டு இறந்த
சிறுமியின் நினைவாக மனிதாபிமான அடிப்படையில் தனது மகளுக்கு ஆசிபா என கேரள
பத்திரிகையாளர் ரஜீத் ராம் என்பவர் பெயரிட்டுள்ளார்.
காஷ்மீரில்
கத்துவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி 7 பேர் கொண்ட கும்பலால்
சீரழிக்கப்பட்டார். கிட்டதட்ட 7 நாட்கள் அந்த சிறுமியை அடைத்து
வைத்திருந்து மயக்க மருந்து செலுத்தி சீரழித்துள்ளனர்.
பின்னர் அவரை
கடந்த ஜனவரி 17-ஆம் தேதி கொலை செய்துவிட்டனர். இந்த உண்மை 3 மாதங்கள்
கழித்து வெளியாகியுள்ளது. இந்த கொடூர சம்பவம் நாட்டையே
அதிர்ச்சிக்குள்ளாகியது.
கேரள மாநிலத்தவர்
2-ஆவது மகள் .
2-ஆவது மகள் .
இதனிடையே
கேரளத்தை சேர்ந்த பத்திரிகையாளர் ரஜீத் ராம்.
இவருக்கு கடந்த பிப்ரவரி 4-ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது. அந்த
குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசனை செய்துக் கொண்டிருந்தார்.
காஷ்மீர் சிறுமி விவகாரம்
குழந்தைக்கு ஆசிபா என பெயர்
இந்த
நிலையில் காஷ்மீரில் சிறுமி விவகாரம் வெளியே வரத் தொடங்கியது. இந்த
சம்பவத்தால் ரஜீத் ராம் மனமுடைந்தார். இதையடுத்து மனைவியுடன் கலந்தாலோசனை
செய்துவிட்டு மகளுக்கு ஆசிபா என பெயர் சூட்டினார்.
வைரலாகும் பதிவு
இதையடுத்து
ஆசிபா என பெயரிட்டது தொடர்பாக பேஸ்புக்கில் குழந்தையின் புகைப்படத்தை
போட்டிருந்தார். இது வைரலாகியது. பதிவு செய்த சிறிது நேரத்திலேயே
ஷேர்களையும் லைக்குகளையும் அள்ளியது. ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை இந்த
எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதில் ரஜீத்துக்கு பாராட்டு தெரிவித்தே
ஏராளமான வாழ்த்துகள் குவிகின்றன.
இருவரும் சேர்ந்து எடுத்த முடிவு
இதுகுறித்து
ரஜீத் ராம் கூறுகையில், கத்துவாவில் 8 வயதான குழந்தை கொலை செய்யப்பட்டுள்ள
நிலையில் எனது மூத்த மகளுக்கு 7 வயதாகிறது. மதம், ஜாதி கடந்த அனைவரிடமும்
நட்பு பாராட்ட வேண்டும் என்பதற்காக எனது இளைய மகளுக்கு ஆசிபா என
பெயரிட்டேன். ஜாதி, மதம் கடந்த முடிவு இதுவாகும் என்றார் ரஜீத் ராம்.
source: oneindia.com
No comments:
Post a Comment