
அநாகரிகமாக அறுவறுப்பாக பேசுவதையே வாடிக்கையாகக்
கொண்டிருக்கும் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜாவின் செயலைப் பார்த்தால்
பரிதாபமாக இருக்கிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்
திருமாவளவன் தெரிவித்துள்ளார். எச். ராஜாவிற்கு மனநல சிகிச்சை
தேவைப்படுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
சட்டமேதை டாக்டர்
அம்பேத்கரின் 128வது பிறந்தநாளையொட்டி சென்னையில் விடுதலை சிறுத்தைகள்
கட்சியின் தலைவர் திருமாவளவன் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து
மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன்
கூறியதாவது : அம்பேத்கர் வரையறுத்த சட்டம் மிகப்பெரிய பாதுகாப்பு அரணாக
இருக்கிறது.
அம்பேத்கரின் சட்டம் வலுவானது அதனை மாற்றியமைக்க வேண்டும் என்று
மதவாத சக்திகள் செயல்பட்டு வருகின்றன. அம்பேத்கரின் சட்டத்தை பலவீனப்படுத்த
பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன, உச்சநீதிமன்றம் போன்ற
அமைப்பின் மூலம் புதிய விளக்கங்களைத் தருவது புதிய புதிய தீர்ப்புகள் மூலம்
பலவீனப்படுத்த நினைக்கிறார்கள்.
எண்ணம் நிறைவேறாது
தாழ்த்தப்பட்ட மக்கள் போராட்டம்
தாழ்த்தப்பட்ட மக்கள் போராட்டம்
ஆனால்
இந்த மதவாத நடவடிக்கைகளுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள்
எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றன. வரலாறு காணாத வகையில் தாழ்த்தப்பட்ட
மக்கள் லட்சக்கணக்கில் வீதிக்கு வந்திருக்கிறார்கள். எனவே மதவாதிகளின்
எண்ணம் முறியடிக்கப்படும்.
போராட்டக்காரர்கள் பற்றி ராஜா கருத்து
பிரதமருக்கு
எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட பாரதிராஜா, அமீர், சீமான் உள்ளிட்ட அனைவருமே
தேச துரோகிகள். இவர்கள் அனைவருமே கைது செய்யப்பட வேண்டும் என்று எச். ராஜா
கூறியது குறித்து திருமாவளவனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாதவர்
இதற்கு
பதிலளித்த திருமாவளவன் எச்.ராஜாவைப் பற்றி தமிழ்நாட்டு மக்கள் நன்று
அறிந்தவர்கள், எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசுவதே அவரின் வழக்கம்.
உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் எதை வேண்டுமானாலும் அநாகரிகமாக
அறுவறுப்பாக பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
மனநல சிகிச்சை தேவை
அனைவராலும்
போற்றப்படும் தந்தை பெரியாரை கொச்சைப்படுத்தியவர் எனினும் அவர் மீது தமிழக
அரசு வழக்கு பதிவு செய்யவில்லை, கைது செய்யவில்லை என்பது தான் வேதனைக்கு
உரியது. தனிப்பட்ட முறையில் எங்கள் மீது குறிப்பாக என் மீது வைக்கும்
விமர்சனங்களைப் பற்றி கவலைப்படவில்லை. எச். ராஜா பரிதாபத்திற்கு உரிய
நிலையில் இருப்பதைக் கண்டு வேதனைப்படுகிறேன். அவருக்கு மனநல சிகிச்சை
தேவைப்படுகிறது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன் என்று திருமாவளவன்
தெரிவித்துள்ளார்.
source: oneindia.com
No comments:
Post a Comment