
உ.பி., மாநிலத்தில் உள்ள காங்., மூத்த தலைவர் சோனியா
தொகுதியில் வரும் 21-ம் தேதி பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா சுற்றுப்பயணம்
செய்து பேரணியில் கலந்து கொள்கிறார்.வரும் 2019ம் ஆண்டு
பார்லிமென்ட்டிற்கான பொது தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து பா.ஜ., தேசிய
தலைவர் அமித்ஷா உ.பி., மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் 21-ம்
தேதி சோனியாவின் தொகுதியான ரேபரேலியில் மிக பிரமாண்ட பேரணி ஒன்றை நடத்த
உள்ளார். இந்த பேரணியில் தொகுதியில் உள்ள பா.ஜ., தொண்டர்கள் மற்றும் காங்.,
தலைவர் ராகுல் தொகுதியான அமேதி தொகுதியில் இருந்தும் ஏராளமான தொண்டர்கள்
கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற
பார்லிமென்ட் தேர்தலில் உ.பி., மாநிலத்தில் அதிக தொகுதிகளை வென்ற போதிலும்
சோனியா, மற்றும் ராகுலின் தொகுதிகளில் பா.ஜ.,வால் வெற்றி பெற முடியவில்லை.
மேலும் அமேதி தொகுதியில் ராகுலுக்கு எதிராக போட்டியிட்ட ஸ்மிருதி இரானியும்
தோல்வியடைந்தார். இருப்பினும் அவர் தற்போது வரை அமேதி தொகுதிக்கு சென்று
வருவதாலும் அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதாலும்
வரும் 2019-ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் மீண்டும் அவர் அமேதி தொகுதியில்
போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment