
ஹைதராபாத்: ஹைதராபாத் மெக்கா மசூதியில் குண்டுவெடிப்பு வழக்கில்
அனைவரையும் விடுவித்து தீர்ப்பளித்த நீதிபதி ரவீந்திர ரெட்டி திடீரென
ராஜினாமா செய்துள்ளார்.
கடந்த 2007, மே 18ம் தேதி சார்மினாருக்கு
அருகில் இருந்த மெக்கா மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகை நடந்து கொண்டிருந்த
போது சக்திவாய்ந்த வெடிகுண்டு வீசப்பட்டது. இந்த சம்பவத்தில் 9 பேர்
உயிரிழந்தனர்,58 பேர் காயமடைந்தனர்.
இந்த குண்டுவெடிப்பின் போது
வெடிக்காத 2 சக்திவாய்ந்த வெடிகுண்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்,
இதோடு மசூதிக்கு வெளியே போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டிலும் 5 பேர்
உயிரிழந்தனர்.
இந்து அமைப்பைச் சேர்ந்த அசீமானந்த், தேவேந்திர
குப்தா, லோகேஷ் ஷர்மா, பாரத்பாய், ரஜேந்தர் செயத்ரி உள்ளிட்ட 8 பேர் இந்த
குண்டு வெடிப்பில் தொடர்புள்ளவர்கள் என்று என்.ஐ.ஏ குற்றம்சாட்டியது.
இவர்களில் 5 பேருக்கான தீர்ப்பு இன்று என்ஐஏ நீதிமன்றம் வழங்கியது.
தீர்ப்பை
வாசித்த நீதிபதி ரவீந்திர ரெட்டி, உரிய ஆதாரங்கள் இல்லாததால் இவர்கள் 5
பேரும் விடுவிக்கப்படுவதாக கூறி 5 பேரையும் விடுவித்து உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து ரவீந்திர ரெட்டி திடீரென ராஜினாமா செய்தார்.
தனிப்பட்ட
காரணங்களுக்காக ராஜினாமா செய்வதாக காரணம் கூறி ஆந்திர தலைமை நீதிபதிக்கு
கடிதத்தை இன்று சமர்ப்பித்தார். இத்துடன் 15 நாட்கள் விடுமுறை கோரியும்
அவர் கடிதம் அளித்துள்ளார்.
No comments:
Post a Comment