
மதவெறியை மாய்த்து மனித நேயம் காப்போம் என்றும் பாஜக வின் அதிகாரத்
திமிரை அடித்து நொறுக்குவோம் என்றும் ஈரோட்டில் நடைபெற்ற திமுக மண்டல
மாநாட்டில் அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஈரோடு
மாவட்டம் பெருந்துறை அருகே சரளையில் கோவை தேசிய நெடுஞ்சாலையில் தி.மு.க.
மண்டல மாநாடு நேற்று தொடங்கியது. இன்று மாநாட்டின் 2-வது நாள் பல்வேறு
தலைப்புகளில் கட்சியின் முன்னோடி தலைவர்கள் பேசினார்கள்.
காவிரி
மேலாண்மை வாரியத்தை தவிர எந்த அமைப்பையும் ஏற்க மாட்டோம் என தி.மு.க.
மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டில் 50 தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின்
நிறைவுரையாற்றினார்.
அப்போது அண்ணா வழியில் அயராது உழைப்போம் என்றும் ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம் என்றும் உறுதிபடத் தெரிவித்தார்.
மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்பதே திமுகவின் கொள்கை என்றும் அதில் திமுக எந்த நிலையிலும் பின்வாங்காது என கூறினார்.
தற்போது
உடல் நலிவுற்று இருப்பதால் திமுக தலைவர் கருணாநிதியால் விழா மேடைக்கு வர
இயலவில்லை. கருணாநிதியின் கம்பீரக் குரலை மாநாட்டில் கேட்க முடியாதது
வருத்தம் அளிக்கிறது. விழாவில் பங்கேற்க இயலாவிட்டாலும் கோபாலபுரத்தில்
இருந்து கருணாநிதி நம்மை வாழ்த்தி வருகிறார் என குறிப்பிட்டார்.
மத
வெறியை மாய்த்து மனித நேயம் காப்போம் என்று உறுதி அளித்த மு.க.ஸ்டாலின்
பாஜகவின் , அதிகாரத் திமிரை அடித்து நொறுக்பகுவோம் என்றும் தெரிவித்தார்.
வளமான தமிழகத்தை வளர்த்தெடுப்போம் தமிழரை வளர்த்து தமிழைப் போற்றுவோம்,. கருணாநிதியின் கட்டளையை கண்போல் காப்போம்.
தமிழ்நாடு
செழித்திட வேண்டும் என்ற நோக்கில் மாநாட்டில் 50 தீர்மானங்கள்
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. மாநாடு வெற்றி பெற்றது போன்று ஈரோடு
மண்டலத்திலும் திமுக வெற்றி பெற வேண்டும் என்று மு.க.ஸ்டாலின்
குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment