
ஈரோடு: கருணாநிதியின் கட்டளையை கண்போல் காப்பாற்றுவோம் என்பது உள்ளிட்ட
ஐம்பெரும் முழக்கங்களை ஸ்டாலின் ஈரோடு மாநாட்டில் வெளியிட்டார்.
ஈரோட்டில்
திமுக சார்பில் 2 நாட்களுக்கு மண்டல மாநாடு தந்தை பெரியார் திடலில்
நடைபெற்றது. நேற்று தொடங்கிய இந்த விழாவை திருச்சி சிவா எம்பி
தொடங்கிவைத்தார். 2-ஆவது நாளான இன்று திமுக சார்பில் கண்டன தீர்மானங்களை
ஸ்டாலின் முன்மொழிந்தார். இந்த மாநாட்டில் 50 தீர்மானங்கள்
நிறைவேற்றுப்பட்டன.
இந்த மாநாட்டில் மு.க.ஸ்டாலின் நிறைவு
உரையாற்றினார். அவர் பேசுகையில், திமுகவின் புதிய ஐம்பெரும் முழக்கங்களை
வெளியிட்டார் ஸ்டாலின்.
திமுகவின் முழக்கங்களில் கருணாநிதியின்
கட்டளையை கண்போல் காப்பாற்றுவோம்.
தமிழரை வளர்த்து தமிழைப் போற்றுவோம். அதிகாரக் குவியலை அடித்து
நொறுக்குவோம். மதவெறியை மாய்த்து மனித நேயம் காப்போம்; வளமான தமிழகத்தை
வளர்த்தெடுப்போம்.
100-க்கு 3% பேர் ஒற்றுமையாக இருப்பதால்
வர்ணாசிரம தர்மம் தலைதூக்குகிறது. 100-க்கு 97% பேராகிய நாம் ஒற்றுமையாக
இல்லாததால் வர்ணாசிரம தர்மம் தலைதூக்குகிறது என்றார் ஸ்டாலின்.
source: oneindia.com
No comments:
Post a Comment