
தனியார் பன்றிப் பண்ணைகளிலிருந்து வெளியேறும் கழிவுகளால் பள்ளி
மாணவர்கள் மற்றும் கிராம மக்களின் சுகாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. இந்த
விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென பொதுமக்கள்
கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம்; அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த இடையபட்டி
ஊராட்சியில் பொத்தையன்பட்டி என்ற கிராமம் உள்ளது. இங்கு ஊராட்சி ஒன்றிய
தொடக்கப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியின் அருகில் தனியாருக்கு சொந்தமான
இரண்டு பன்றிப் பண்ணைகள் உள்ளன. இறைச்சிக்காக இங்கு பன்றிகள்
வளர்க்கப்படுகின்றன. அந்த பண்ணைகளில் கறிக்காக பன்றிகள் தினமும்
வெட்டப்படுகின்றன.
அந்தச் சமயத்தில் எஞ்சும் கழிவுகள், அருகிலுள்ள வாய்க்கால் மூலம்
வெளியேற்றப்படுகின்றன.
கண்மாயில் நீர் அதிகம் இருக்கும்போது,விவசாயத்துக்காக பயன்படுத்தப்படும் பாசன நீருடன் கலந்தது. ஆனால், தற்போது கண்மாய் நீர் வற்றிக்கிடக்கிறது.அதனால்,பன்றிப்பண்ணையிலிருந்து செல்லும் கழிவுநீர் இந்தக் கண்மாய்க்குள் குட்டைபோல் தேங்கிக் கிடக்கிறது. நாள்பட்டுக் கிடக்கும் இந்த கழிவுநீரால் சகிக்க முடியாத துர்நாற்றம் வெளியேறுகிறது. பள்ளி அமைந்துள்ள பகுதி மற்றும் குடியிருப்புகளுக்கு பரவுகிறது. இதனால் பள்ளி மாணவர்களும் பொதுமக்களும் துர்நாற்றத்தால் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறோம். சாப்பிடும் நேரங்களில் துர்நாற்றத்தால் ஒவ்வாமை ஏற்படுவதால் சாப்பிட முடியாமல் மனஉளைச்சலுக்கும் ஆளாகி வருகிறோம். துர்நாற்றம் வெளியே செல்லாத வகையில் பாதுகாப்பான முறையில் பண்ணைக் கழிவுகளை பாதாள தொட்டிகளில் சேமிக்காமல், இப்படி திறந்தவெளியில் தொடர்ந்து திறந்து விடுகிறார்கள். அந்த கழிவுநீர் தினமும் கண்மாய்க்கு வந்து சேரும். கழிவுநீர் கண்மாயின் ஒரு பகுதியில் குட்டையாய் மாறியுள்ளதால், எங்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது"என்றார்கள்.
இப்பகுதி
மக்களின் தொடர்ச்சியான முயற்சிகளின் விளைவாக கடந்த வாரம் தாசில்தார்
சோனைகருப்பையா உள்ளிட்ட வருவாய்த்துறை அலுவலர்களும், சுகாதா ஆய்வாளர்கள்
மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்களும், உள்ளாட்சித்துறை அலுவலர்களும் இந்தக்
கழிவு நீர் குட்டையை பார்வையிட்டுச்சென்றனர். ஆனால்,இன்றுவரை எவ்வித
நடவடியும் எடுக்கவில்லை என்றும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் மாணவர்கள், பொதுமக்கள் சுகாதார பாதுகாப்பை உறுதி செய்யும்
வகையில், இந்தத் தனியார் பன்றிப் பண்ணைகளிலிருந்து வெறியேற்றப்படும்
கழிவுநீர் பொது பயன்பாட்டுக்குரிய கண்மாயிலும், வெட்டவெளியிலும்
நோய்த்தொற்று ஏற்படும் வகையில் திறந்துவிடப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை
எடுக்கவேண்டுமென்றும் மாவட்ட கலெக்டருக்கு அப்பகுதி பொதுமக்களும்
பொத்தையன்பட்டி பள்ளி மாணவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment